மீனாம்பாள் சிவராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்னை மீனாம்பாள் சிவராஜ்
Annai Meenambal.jpg
அன்னை மீனாம்பாள்
பிறப்பு(1904-12-26)திசம்பர் 26, 1904
ரங்கூன், பர்மா
இறப்பு30 நவம்பர் 1992(1992-11-30) (அகவை 87)
தேசியம்இந்தியர்
பணிஅரசியல் ஆர்வலர்
அரசியல் கட்சிபட்டியலினத்தவர் கூட்டமைப்பு
அரசியல் இயக்கம்அம்பேத்கரிய இயக்கம்
வாழ்க்கைத்
துணை
ந. சிவராஜ்
(தி. 1918; இற. 1964)

மீனாம்பாள் சிவராஜ் (26 டிசம்பர், 1904 30 நவம்பர், 1992) பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தனது வாழ்நாள் இலட்சியமாகக்கொண்டு போராடியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை அறிந்தவர். மெட்ராஸ் மாநகராட்சியின் உறுப்பினராக முதல் ஆதிதிராவிடப் பெண். 1942ஆம் ஆண்டில் பட்டியலினததவர் கூட்டமைப்பை (Schedule Castes Federation) உருவாக்கியவர்களுள் ஒருவர்[1]

குடும்பம்

மீனாம்பாள், மெட்ராஸ் மாநகராட்சி உறுப்பினராகவும் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் 1923ஆம் ஆண்டு முதல் 1926ஆம் ஆண்டு வரை உறுப்பினராகவும் இருந்த கோ. வாசுதேவப்பிள்ளக்கும் மீனாட்சி அம்மையாருக்கும் மகள். கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட கப்பல் வணிகர் பெ. ம. மதுரைப்பிள்ளைக்கு மகள்வழிப் பேத்தி. இவர் தந்தைக்குச் சொந்த ஊர் வேலூர். பர்மாவில் உள்ள இரங்கூனில் வணிகம் செய்தவர். அங்குதான் மீனாம்பாள் பிறந்தவர். தன் தந்தை ரங்கூனில் உருவாக்கிய மதுரை பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேசன் பயின்று தேறினார். பின்னர் இரங்கூன் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow or Arts) வகுப்பை 1917ஆம் ஆண்டில் நிறைவுசெய்தார்.[1] இவர் தனது 16வது வயதில் மெட்ராஸுக்கு வந்து 1918இல் பட்டியலின இயக்கத் தலைவரும் பின்னாளில் மெட்ராஸ் மேயராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தவருமான இராவ் பகதூர் ந. சிவராஜ் என்பவரை மணந்தார்.[2] இவரகளுக்கு 2 ஆண் மக்களும் 2 பெண் மக்களும் பிறந்தனர்.[3]

பொறுப்புகளும் பணிகளும்

  • மெட்ராஸ் மாநகராட்சி உறுப்பினர் (6 ஆண்டுகள்)
  • மெட்ராஸ் மாநகராட்சி துணைமேயர்
  • மாகாண கௌரவ மாஜிஸ்ட்ரேட் (1937 முதல் 16 ஆண்டுகள்)
  • மெட்ராஸ் மாகாண ஆலோசனைக்குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
  • திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
  • தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
  • மெட்ராஸ் நகர ரேஷன் ஆலோசனைக்குழு உறுப்பினர்
  • மெட்ராஸ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் - மெட்ராஸ் மாநகராட்சி அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] (13 ஆண்டுகள்)
  • போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
  • S.P.C.A உறுப்பினர்
  • நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
  • தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
  • அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
  • மெட்ராஸ் கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநர்
  • விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
  • காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
  • மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
  • மெட்ராஸ் அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக்குழு உறுப்பினர்
  • அடையாற்றில் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துநர்
  • லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
  • ஆதி திராவிட மகாஜன சங்கத் துணைத்தலைவர்
  • ஆதி ஆந்திரர்கள் சங்கத் துணைத்தலைவர்

அரசியல்

  • 1928ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகைதந்த சைமன் குழுவை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டதன் வாயிலாக அரசியலில் அடியெடுத்து வைத்தார் மீனாம்பாள்.
  • 1929ஆம் ஆண்டு முதலாவது வட்டமேசை மாநாட்டை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
  • 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார்.
  • 1938 திசம்பர் 29,30,31 ஆம் நாள்களில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார்[4]
  • 1944 செப்டம்பர் 23ஆம் நாள் மெட்ராஸில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் சார்பில் பெண்கள் மாநாட்டைக் கூட்டினார். அதில் அம்பேத்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.[1]
  • 1945 மே 6ஆம் நாம் பம்பாயில் கூட்டப்பட்ட அனைத்திந்திய பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். [1]

தேர்தல்

  • 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்திற்கு மதுராந்தகம் இரட்டை உறுப்பினர் தொகுதியில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1]
  • மெட்ராஸ் மாகாண சட்டமேலவைக்கு 1952ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1]

மறைவு

மீனாம்பாள் முதுமையில் இந்தியக் காவல் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தன் மகன் தயாசங்கர் பேணுகையில் வாழ்ந்து 1992 நவம்பர் 30ஆம் நாள் தனது 87ஆம் வயதில் மரணமடைந்தார்.[1]

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Encyclopedia of Dalits in India - Volume 4; Editors: Sanjay Paswan and Paramanshi Jaydeva; Ed.2004; Kalpaz Publicaitons, Delhi-52; page.249-250
  2. சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93
  3. Encyclopedia of Dalits in India - Volume 4; Editors: Sanjay Paswan and Paramanshi Jaydeva; Ed.2004; Kalpaz Publicaitons, Delhi-52; page.205
  4. சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மீனாம்பாள்_சிவராஜ்&oldid=23871" இருந்து மீள்விக்கப்பட்டது