மீனாட்சியம்மை குறம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரை மீனாட்சியம்மை குறம் [1] [2] என்னும் நூல் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. சொக்கலிங்கப் பெருமான் (சிவன்) மதுரையில் வீதி உலா வரும் போது காணும் மீனாட்சியம்மை அவர் மீது காதல் வயப்படுகிறார். அவரையே எண்ணியிருக்கும் கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி [3] சொல்வதாக அமைந்துள்ளது. இது குறம் என்னும் சிற்றிலக்கிய வகை.

பாடல்களின் எண்ணிக்கை

காப்பு ஒன்றும், 51 பாடல்களும் இந்நூலில் அடங்கும்.

எடுத்தாண்ட யாப்புகள்

காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தத்தில் உள்ளது.

51 செய்யுள்களில் எடுத்தாண்ட யாப்பிலக்கண வகைகளாவன:

  1. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  2. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  3. கொச்சகக் கலிப்பா
  4. சிந்து

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 123. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. p. 525.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  3. எதிர்காலம் பற்றிக் குறித்துச் சொல்லுதல்
"https://tamilar.wiki/index.php?title=மீனாட்சியம்மை_குறம்&oldid=14664" இருந்து மீள்விக்கப்பட்டது