மிளைப் பெருங்கந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மிளைப் பெருங்கந்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவன் அரசன். கந்தனார் எனச் சிறப்பிக்கப்படாமையால் அரசன் என்கிறோம். இப்புலவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை குறுந்தொகை 136, 204, 234 ஆகியவை.

மிளை என்பது காவல்காடு. காவல்காடு உள்ளதோர் ஊர்.

பாடல் சொல்லும் செய்திகள்

குறுந்தொகை 136

தலைவன் தன் பாங்கனுக்குச் சொல்கிறான்.

'காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே' உருத்துச் சினம் கொள்வதோ சினம் தணிதலோ அதில் இல்லை. யானை குளகை மென்று மதம் கொள்வது போல அதற்கென்று தனிப் பாணி உண்டு.

குறுந்தொகை 204

பாங்கன் தலைவனுக்குச் சொல்கிறான்.

'காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே'. நினைத்துப் பார்த்தால் வறட்டு நிலத்தில் தலைகாட்டும் முற்றாத இளம்புல்லைக் கிழட்டுப் பசு தன் நாவால் தடவி (வயிறு நிறையாமல்) இன்பம் காண்பது போன்றது.

குறுந்தொகை 234

கிழத்தி தன் தோழிக்குச் சொல்கிறாள்.

முல்லை மலரும் மாலைக் காலத்தைதான் மாலை என்று பொதுவாகச் சொல்வார்கள். துணைவர் பிரிந்திருக்கும் காலத்தில் தனித்திருக்கும் பெண்களுக்குச் சேவல் கூவும் விடியற் காலமும், பட்டப் பகலுங்கூட வருத்தம் தரும் மாலைதான்.

இவற்றையும் காண்க

மிளைக் கந்தன்
மிளைவேள் தித்தன்

"https://tamilar.wiki/index.php?title=மிளைப்_பெருங்கந்தன்&oldid=12698" இருந்து மீள்விக்கப்பட்டது