மிளைவேள் தித்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மிளைவேள் தித்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். சங்கநூல் தொகுப்பில் இவனது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 284.

உறந்தை அரசன் தித்தன் வேறு. மிளைவேள் தித்தன் வேறு.

  • மிளை = காவல்காடு
  • வேள் = வேளிர்குடி வள்ளல்

பாடல் சொல்லும் செய்தி

திருமணம் நிகழவிருக்கிறது. தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

அவன் நாடன். நாடன் அறவன் ஆயினும் அறநெறி அல்லாதவன் ஆயினும் இருந்துவிட்டுப் போகட்டும். அவனது சிறுகுடி நம்மை ஏசுமோ? அல்லது நம்மை நினைக்காதோ?

  • ஏசு = புகழ் (ஒப்புநோக்குக: 'கல்லேசு கவலை' - மலைபடுகடாம்)

அவன் நாடு

போரிட்ட யானையின் புகர்முகம் போலப் பெரும் பாறாங்கற்களில் பலாப்பழமும், காந்தள் பூக்களும் வீழ்ந்துகிடக்கும் நாடு அவன் நாடு.

சிறுகுடி

வரையில் அருவி கொட்டுவது போல சொற்களைக் கொட்டும் ஊர் அவன் சிறுகுடி.
"https://tamilar.wiki/index.php?title=மிளைவேள்_தித்தன்&oldid=12699" இருந்து மீள்விக்கப்பட்டது