மிருதுபாசினி கோவிந்தராசன்
மிருதுபாசினி கோவிந்தராசன் (Mirudhubashini Govindarajan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுகாதார ஆலோசகர் ஆவார். 1947 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பெண்களின் உடல்நலம் மற்றும் கருவுறாமை மேலாண்மை [1] போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
மகப்பேறு குழந்தையின்மைச் சிகிச்சை மருத்துவராக மிருதுபாசினி கோவிந்தராசன் 46 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார். இலட்சம் பெண்களுக்கும் மேலானவர்களுக்கு இவர் சிகிச்சையளித்துள்ளார். மெனோபாசு மேலாண்மை, கறுவுருதலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிகிச்சைகள், ஆகிய மகளிர் பிரச்சினைகளில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.[2]
பின்னணி
மிருதுபாசினி கோவிந்தராசன் கோயம்புத்தூரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரான இவரது தந்தை ஒரு வழக்கறிஞராவார். இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தும் அரசியல்வாதியுமாவார். கோவிந்தராசனின் அம்மா கோவையில் ஒரு மருத்துவராக இருந்தார்.
ஆரம்பக் கல்வியை மிருதுபாசினி இந்தியாவின் கோயம்புத்தூரில் முடித்தார். பின்னர் இவர் மருத்துவப் பட்டம் பெறுவதற்காக தனது தாயார்,பணிபுரியும் சென்னையில் உள்ள இசுடான்லி மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார். சென்னையில் தனது மருத்துவப் படிப்பை முடித்ததும், நியூயார்க்கிற்கும் பின்னர் கனடாவின் மனிடோபாவின் வின்னிபெக்கிற்கும் சென்றார். 1977 ஆம் ஆண்டு கனடாவின் ராயல் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் கல்லூரியின் சக உறுப்பினர் தகுதியைப் பெற்றார். கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆனார்.
1981 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும், மிருதுபாசினி சிறீ ராமகிருட்டிணா மருத்துவமனையில் சேர்ந்து, அங்கு மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையைத் தொடங்கினார். இங்கு மகளிர் மையத்தை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கோயம்புத்தூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தனது சொந்த மகளிர் மையத்திற்கு ஒரு கூரையின் கீழ் அனைத்தும் என்ற புதிய வசதிகளுடன் சென்றார். எண்டோமெட்ரியோசிசு எனப்படும் இடமகல் கருப்பை அகப்படலம் மற்றும் தொடர்புடைய கோளாறுகள் மற்றும் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கும் முறைகள் தொடர்பாக இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.[3][4]
தற்போதைய நிலைகள்
கோவை மதர்வுட்டு மருத்துவமனையின் இயக்குநராக தற்போது மிருதுபாசினி கோவிந்தராசன் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் ஊடகத்துறைக்கு அளித்த நேர்காணலில் இவர் பின்வருமாறு பேட்டியளித்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன் கருத்தரித்தல் என்பது மிகவும் சுலபமான செயலாக இருந்தது. 15 சதவீத தம்பதியருக்கு மட்டுமே கருவுறுதலில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது, குழந்தையின்மை என்பது பூதாகாரமான பிரச்னையாக மாறியுள்ளது. அதற்கு முதல் காரணம், வாழ்க்கை முறை மாற்றம் தான். வாழ்க்கை முறையும்,உணவு பழக்கமும் மாறும் போது உடலில் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. நெகிழி, செயற்கை உரங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் பயன்பாடும், இப்பிரச்னைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. பொதுவாக, 25 - 35 வயதுக்குள் கருத்தரிப்பது தான் ஆரோக்கியமானது. அந்த வயதை தாண்டினாலே கருவுறுதலில் பிரச்னை ஏற்படும்.காரணம், இளம் வயதில் மனித உடலில் முட்டைகளின் உற்பத்தி அதிகமாக இருக்கும்; வயதாக ஆக அதன் எண்ணிக்கை குறையும். இதில் ஆணுக்கு பிரச்னையா, பெண்ணுக்கு பிரச்னையா என்பதை, சில பரிசோதனைகள் மூலம் துல்லியமாக கணக்கிட முடியும். இந்த மாதிரி பிரச்னை வராமல் இருக்க வாழ்க்கை முறை மாற்றம் அவசியம். நம் பண்டைய வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் இந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். மேற்கத்திய உணவுகளை தவிர்த்து, பாரம்பரியமான நம் உணவுகளை சாப்பிடலாம்.[5] [6] இதைத்தவிர இவர் பின்வரும் அமைப்புகளிலும் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றார்.
- மருத்துவ இயக்குனர், மகளிர் மையம், கோயம்புத்தூர்
- மருத்துவ இயக்குனர், உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மையம் கோயம்புத்தூர்
- இயக்குனர், பேறுகால நலப்பராமரித்தல் கோயம்புத்தூர் தனியார் நிறுவன மையம் இயக்குனர், மகளிர் மையம் மற்றும் மருத்துவமனைகள் தனியார் நிறுவனம், கோயம்புத்தூர்
- துணைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் [7]
வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி
- மலட்டுத்தன்மையின் பரம்பரை [8]
- மனித இனப்பெருக்க மருத்துவ இதழ் [9]
- கருத்தரித்தல் மற்றும் வளர்ச்சி: கோட்பாடு மற்றும் நடைமுறை [10]
- கருவுறாமைக்கு பயனுள்ள சிகிச்சை [11]
உறுப்பினர்
ஆதாரம்:[12]
- இந்திய மருத்துவ சங்கம்
- கோவை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ கழகம் - தலைவர், 2002-2003
- இந்தியாவின் மகளிர் மருத்துவ மற்றும் மகப்பேறியல் சங்கங்கள்
- உயிரணுவியலாளர்கள் இந்திய சங்கம்
- பேறுகால குழு-
- மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் ஐரோப்பிய சமூகம்
- இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமெரிக்க சங்கம்
- ஆசிரியர் குழு உறுப்பினர், சர்வதேச மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ இதழ், நியூசிலாந்து.
- நிறுவனர் தலைவர் கோவை மீயொலி சங்கம்
விருதுகள்
- மகளிர் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளுக்காக ரோட்டரி விருது
- பெண்களுக்கான தினமலர் விருது "மருத்துவ அறிவியலில் சாதனை"
- மணி மேல்நிலைப்பள்ளியில் வாழ்நாள் சாதனைக்காக சிறந்த மாணவர் விருது
- 2008 இல் பேராசிரியர் அர்னால்டு எச் எய்னார் அறக்கட்டளையின் சொற்பொழிவாளர் [13] விருது.
மேற்கோள்கள்
- ↑ "Archived copy". Archived from the original on 2010-06-30. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) GG Hospital - ↑ "குழந்தையின்மை ஏன் ஏற்படுகிறது?". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2021/may/26/why-does-infertility-occur-3629538.html. பார்த்த நாள்: 18 September 2021.
- ↑ [1] பரணிடப்பட்டது 2016-10-13 at the வந்தவழி இயந்திரம் Patent Info
- ↑ [2][தொடர்பிழந்த இணைப்பு] Patent Filing
- ↑ "வாழ்க்கை முறையில் நிறைய மாற்றம்". Dinamalar. 2021-06-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
- ↑ "Archived copy". Archived from the original on 2008-11-20. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Sri Ramakrishna Hospital - ↑ [3] பரணிடப்பட்டது 24 பெப்ரவரி 2016 at the வந்தவழி இயந்திரம் DR MGR Medical University
- ↑ [4] Google Books
- ↑ [5] Journal of Human Reproductive Medicine Online
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Jaypee Brothers - ↑ [6]
- ↑ [7] Womens Center
- ↑ [8] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் Maryland Community Newspapers