மா. சண்முகசிவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மா. சண்முகசிவா
மா. சண்முகசிவா
இயற்பெயர்/
அறியும் பெயர்
மா. சண்முகசிவா
பிறந்ததிகதி அக்டோபர் 25 1950
அறியப்படுவது எழுத்தாளர்

மா. சண்முகசிவா (பிறப்பு: அக்டோபர் 25 1950)( புகைப்படத்திற்கு நன்றி வல்லினம்) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'பத்தாங்கட்டை பத்துமலை' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் பொது மருத்துவராகவும், சரும நோய் நிபுணராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் "அகம்" எனும் இலக்கிய அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் துறை ஈடுபாடு

1970 தொடக்கம் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வரும் இவரொரு முன்னணிச் சிறுகதையாசிரியரும், புத்திலக்கிய விமர்சகரும், புதுக்கவிதையாசிரியருமாவார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் 'சலங்கை' இதழிலும் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, இலண்டன் பி.பி.சி தமிழோசையில் மலேசியத் தமிழர் குறித்துக் கருத்துரைகளையும் ஆற்றியுள்ளார்.

கேள்வி - பதில் பகுதி

"மலேசிய நண்பன்" இதழில் மருத்துவம் பற்றிய இலக்கியம் கலந்த சுவையான கேள்வி-பதில் பகுதியை எழுதி வருகின்ற இவர், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புத்திலக்கியப் படைப்பு வழிகாட்டிக் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்.

நூல்கள்

  • வீடும் விழுதுகளும் (சிறுகதைகள் - 1998)
  • மனதிலிருந்தும் மருந்திலிருந்தும் (மருத்துவ கேள்வி பதில் - 2013)
  • மா.சண்முகசிவா சிறுகதைகள் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - 2018)
  • சிறைக் கைதிகளுக்கான மனமாற்ற வழிகாட்டி நூல் - 2020
  • வள்ளலார் வாழ்வும் வாக்கும் (கட்டுரை 2022)
  • அன்பேற்றுதல் (கட்டுரைகள் - 2022)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மா._சண்முகசிவா&oldid=6370" இருந்து மீள்விக்கப்பட்டது