மாளவிகா ஐயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாளவிகா ஐயர்
Malvika Iyer at the United Nations.jpg
நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மார்ச் 2017இல் நடந்த இளைஞர் மாநாட்டின் 61வது அமர்வில் மாளவிகா.
பிறப்பு18 பிப்ரவரி 1989[1]
கும்பகோணம், தமிழ்நாடு
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
அறியப்படுவதுஊக்கமூட்டும் பேச்சு, மாற்றுத்திறனாளிகளின் உரிமை ஆர்வலர்

மாளவிகா ஐயர் (Malvika Iyer) (பிறப்பு: 1989 பிப்ரவரி 18) இந்தியாவைச் சேர்ந்த இவர் ஒரு மாற்றுத்திறனாளியும், வெடிகுண்டு விபத்திலிருந்து தப்பியவரும், ஒரு சமூக சேவகரும், சர்வதேச ஊக்கமூட்டும் பேச்சாளரும், மாற்றுத்திறனாளிகளின் உரிமை ஆர்வலரும் ஆவார். [2] அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கப் பணியாற்றுகிறார்.[3] இவர் 2017 ஆம் ஆண்டில் சென்னை சமூகப் பணி பள்ளியிலிருந்து சமூகப்பணியில் முனைவர் பட்டம் பெற்றார்.இவரது முனைவர்ளை மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவது பற்றியதாகும்.

ஆரம்ப வாழ்க்கை

மாளவிகா 1989 பிப்ரவரி 18 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணத்தில், பி. கிருஷ்ணன், ஹேமா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். [4] இவரது ராஜஸ்தானின் பிகானேரில் தந்தை நீர்வழங்கல் துறையில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். [5] 2002 மே 26 தனது 13 வயதில், பிகானேரில் உள்ள தனது வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக இவரது இரு கைகளிலும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. [6] மேலும், பல எலும்பு முறிவுகளும், நரம்பு முடக்கமும், உணர்வின்மை உள்ளிட்ட பல பக்க விளைவுகள் ஏற்பட்டது. சென்னையில் 18 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் (பல அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டது), இவர், ஊன்றுகோல் உதவியுடன் நடக்கத் தொடங்கினார். மேலும் செயற்கைக் கைகள் பொருத்தப்பட்டது.

மருத்துவமனையில் இருந்தபோது, தனது பத்தாம் வகுப்புத் தேர்வை ஒரு தனித்தேர்வராக எழுதினார். [5] ஒரு சொல்வதை எழுதுபவர் உதவியுடன் தேர்வை எழுதி, தனித் தேர்வர்களிடையே மாநிலத் தரத்தைப் பெற்றார்.[5] இது மக்கள் கவனத்தை ஈர்த்தது. இவரை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அழைத்துப் பாராட்டினார்.

பின்னர், இவர் புது தில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். பின்னர் தில்லி சமூகப் பணி பள்ளியில் சமூகப் பணியில் முதுகலையை முடித்தார். மேலும், 2012 இல், சென்னை சமூகப் பணி பள்ளியில் சமூகப் பணியில் தனது ஆய்வறிக்கைக்காக முதுதத்துவமாணியைப் பெற்றார். இதில் இவர் முதல் வகுப்பை பெற்றதோடு, சிறந்த முதுத்தத்துவமாணி விருதுக்கான 'சுழல் கோப்பை'யை வென்றார். [7]

செயல்பாடுகள்

இவர், 2013இல் TEDxYouth @ Chennai என்ற நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டார். [8] இந்த அனுபவத்தை ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக தனது வாழ்க்கையின் தொடக்கமாக இவர் கருதுகிறார். பின்னர், நியூயார்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபை இந்திய மேலாண்மை நிறுவனம், கோழிக்கோடு, [9] நோர்வே, [10] இந்தோனேசியா [11] தென்னாப்பிரிக்கா [12], சிங்கப்பூர் [13] போன்ற இடங்களில் தனது உரைகளைத் தொடர்ந்தார். பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் இளைஞர் மன்றங்களில் தனது ஊக்கப் பேச்சுக்கள் மற்றும் உணர்திறன் பட்டறைகள் மூலம், உலகளாவிய வடிவமைப்பு, அணுகக்கூடிய பொது இடங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார். மேலும், ஊனமுற்ற இளைஞர்களின் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார்.

மாற்றுத் திறனாளிகள் தங்களது உடல் சார்ந்து நேர்மறையான எண்ணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இவர் பணியாற்றியுள்ளார். [14] இவர் 2013இல் இந்தியக் குழு உச்சி மாநாட்டை நடத்தினார். மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணியக்கூடிய வகையில் ஆடை வடிவமைப்பை முன்னெடுத்த இவர், சென்னை, தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியும், திறன் அறக்கட்டளையும் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய ஆடைகளை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை இவர் வலியுறுத்தினார். [15] 2014 ஆம் ஆண்டில், உலக பொருளாதார மன்றத்தின் முன்முயற்சியான குளோபல் ஷேப்பர்ஸ் சமூகத்தின் சென்னை மையத்திற்கு உலகளாவிய வடிவமைப்பாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [16]

ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மற்றும் பாலின சமத்துவம் குறித்த இளைஞர் மேம்பாட்டு செயற்குழுவின் வலையமைப்பில் சேர்ந்தார். மார்ச் 2017 இல் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்தவும் அழைக்கப்பட்டார். [17] [18] அக்டோபர் 2017 இல், புதுதில்லியின் தாஜ் விடுதியில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் இந்திய பொருளாதார உச்சி மாநாட்டிற்கு இணைத் தலைவராக அழைக்கப்பட்டார். [19] [20]

அங்கீகாரம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 8 மார்ச் 2018 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடமிருந்து மகளிர் அதிகாரமளிப்பதில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக பெண்களுக்கான மிக உயர்ந்த கௌரவமான நாரி சக்தி விருதினைப் பெற்றார். மார்ச் 8, 2020 அன்று, ஆண்டில் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவர் இந்தியப் பிரதமரின் டுவிட்டர் கணக்கில் இவர் இடம் பெற்றார். [21] [22]

மேற்கோள்கள்

  1. "Blast Survivor Got Her "Only Finger" After Surgery. Her Story". NDTV. https://www.ndtv.com/offbeat/surgical-error-proved-to-be-a-boon-for-malvika-iyer-who-lost-hands-in-blast-2182507. 
  2. World Economic Forum (2017-10-09), A Bilateral Amputee Offers a Lesson on Resilience, retrieved 2017-11-11
  3. Harish, Ritu Goyal (2015-10-23). "Life Took This Fashionista's Hands So She Grew Wings" இம் மூலத்தில் இருந்து 2017-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170406023056/http://english.fashion101.in/news/FAS-BLOG-malvika-iyer-fashion-for-the-differently-abled-5149089.html. 
  4. Koshy, Tessy (2015-07-27). "'I'm glad both my hands were blown off'" இம் மூலத்தில் இருந்து 2017-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170404134045/http://fridaymagazine.ae/features/the-big-story/i-m-glad-both-my-hands-were-blown-off-1.1554612. 
  5. 5.0 5.1 5.2 Bhattacharya, Saptarshi (2004-05-28). "Where there is a will there is a way". http://www.thehindu.com/2004/05/28/stories/2004052812180300.htm. 
  6. "This 28-Year-Old Global Icon’s Story Proves the Power of a Mother’s Love and Determination". 2017-04-01. http://www.thebetterindia.com/93591/malvika-iyer-global-icon-inspiration-mother-hema-krishna/. 
  7. Menon, Sudha; Ferose, V.R. (2014). Gifted : Inspiring Stories of People with Disabilities. India: Random House India. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184005455. https://archive.org/details/giftedinspirings0000meno. 
  8. "Inclusion starts from within: Malvika Iyer at TEDxYouth@Chennai". 2013-12-04. https://www.youtube.com/watch?v=9el_A5O9ZQI. 
  9. "The only Disability in life is a bad attitude | Malvika Iyer | TEDxIIMKozhikode". 2015-12-25. https://www.youtube.com/watch?v=VTViAugjjRg. 
  10. "Bærekraftfestivalen". 2015-05-24 இம் மூலத்தில் இருந்து 2017-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170404132439/https://www.hurdalecovillage.no/landsbynytt/2015/9/16/brekraftfestivalen. 
  11. "Plenary 6 on the 3rd AGENDA Regional Dialogue on Access to Elections". 2015-02-22 இம் மூலத்தில் இருந்து 2017-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170404132840/http://www2.agendaasia.org/index.php/gallery/videos?ygstart=8. 
  12. "2014 INTERNATIONAL CIVIL SOCIETY WEEK" இம் மூலத்தில் இருந்து 2016-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160429204350/http://www.civicus.org/ICSW/downloads/ISCW-2014-Programme-Amend-16.pdf. 
  13. Tan, Theresa (2018-10-17). "Only disability in life is a bad attitude, says Indian activist and motivational speaker Malvika Iyer" (in en). https://www.straitstimes.com/singapore/the-only-disability-in-life-is-a-bad-attitude-says-indian-activist-and-motivational. 
  14. Dupere, Katie (2017-02-17). "People with disabilities destroy stigma on Twitter with #DisabledAndCute". http://mashable.com/2017/02/17/disabledandcute-disability-hashtag/. 
  15. Madhavan, Nila (2015-08-04). ""I’m Glad This Accident Happened". Meet Malvika Iyer" (in en) இம் மூலத்தில் இருந்து 2017-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170421091946/http://www.fuellingdreams.com/get-inspired/im-glad-this-accident-happened-malvika-iyer/. 
  16. "She rose like the phoenix". 2016-09-11. http://www.redelephantfoundation.org/2016/09/she-rose-like-phoenix.html. 
  17. "Closing session Launch of CEDAW for Youth, Youth Forum (CSW 61)". 2017-03-11. http://webtv.un.org/watch/closing-session-launch-of-cedaw-for-youth-youth-forum-csw-61/5356414875001?page=1. 
  18. Luo, Christina (2017-04-07). "Take Up Space With Your Voice" (in en-CA). http://www.huffingtonpost.ca/plan-international-canada/raise-your-voice_b_15832366.html. 
  19. Chainey, Ross (2017-10-06). "7 key moments from our meeting of global leaders in India". https://www.weforum.org/agenda/2017/10/india-economic-summit-wef-2017-highlights/. 
  20. Kithsiri, Indira (2017-10-02). "What worries South Asia’s young people, and what they’re doing about it". https://www.weforum.org/agenda/2017/10/what-concerns-south-asias-youth-and-what-theyre-doing-about-it/. 
  21. "Bomb-blast survivor Malvika Iyer tweets message of courage on Narendra Modi's Twitter handle". https://www.newindianexpress.com/nation/2020/mar/08/bomb-blast-survivor-malvika-iyer-tweets-message-of-courage-on-narendra-modis-twitter-handle-2114032.html. 
  22. "Who is Malvika Iyer, one of the women handling PM Modi’s Twitter handle?" (in en). 2020-03-08. https://www.deccanchronicle.com/nation/in-other-news/080320/who-is-malvika-iyer-one-of-the-women-handling-pm-modis-twitter-han.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாளவிகா_ஐயர்&oldid=10297" இருந்து மீள்விக்கப்பட்டது