மாறன் கிளவி மணிமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாறன் கிளவி மணிமாலை [1] என்னும் நூல் 16 ஆம் உரைநூலில் உரைநூலில் பாடல் எடுத்துக்காட்டுடன் குறிப்பிடப்பட்ட நூல்களில் ஒன்று. களவியற் காரிகை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள உரையில் இந்த நூல் பற்றிய செய்தி உள்ளது. களவிவியல் காரிகை உரையில் 'மூன்று கிளவிகள்' என்னும் தொடரால் மூன்று நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை கிளவி-விளக்கம், கிளவித்தெளிவு, கிளவிமாலை என்னும் நூல்கள். இவை மூன்றும் மூன்று வெண்பாவால் குறிப்பிடப்பட்டுள்ளன. கிளவிமாலைப் பாடல்கள் என நான்கு பாடல்கள் மேற்கோள் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. அற்றுள் இரண்டு பாடல்கள் வருமாறு:

பாடல் [2]

விரியும் களப முலையும் புன் மூரலும் வேயும் முத்திக்
கழியும் முரோம ஒழுக்கும் கண்டேம் வண்டு சூழ்ந்து செந்தேன்
வழியும் திருமணி மாலைப் பிரான் வெற்பில் வங்ஙி செவ்வாய்
பொழியுந்துணை நெஞ்சமே செவிக்கே என்று மூழ்குவதே
இடிக்கும் கடகயிற்றான் சடகோபன்[3] இயல் இசையாய்
வடிக்கும் தமிழ்மறை பாடிய மாறன் மணிவரைமேல்
நடிக்கும் களிமயிலே வருந்தேல் நுமர் நல் வரைப் பூங்-
கொடிக்கும் கொழுகொம்பரா பெயர் மாடக் கொடிக் கழையே [4]

நம்மாழ்வார் மாறன், சடகோபன் என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுபவர். இவரது திருவாய்மொழி இங்கு மாறன் கிளவி என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 81. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
  3. மாறன் = நம்மாழ்வார்
  4. இவை கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்த பாடல்கள்
"https://tamilar.wiki/index.php?title=மாறன்_கிளவி_மணிமாலை&oldid=17478" இருந்து மீள்விக்கப்பட்டது