மாறன் அலங்காரம்
Jump to navigation
Jump to search
மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று. இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல். இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இது எழுதப்பட்ட மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.[1] தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில் மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
மாறன் அலங்கார உரை
பேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர். பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.
அணிகள்
அணிகள் (மாறன் அலங்காரம்-64 அணிகள்) இதில் அணி மற்றும் அணி வகைகளாக மொத்தம் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. [2]
- அசங்கதி 2
- அதிகம் 1
- அபநுதி 4
- அற்புதம் 2
- ஆசி 2
- ஆர்வமொழி 1
- இணையெதுகை 2
- இலேசம் 1
- இறைச்சிப்பொருன் 1
- உதாத்தம் 9
- உபாயம் 1
- உருவகம் 26
- உல்லேகம் 4
- உவமை 46
- உள்ளுறை 5
- உறுசுவை 1
- ஏகாவளி 1
- ஏது 24
- ஒட்டு 6
- ஒப்புமை 2
- காரணமாலை 1
- காரியமாலை 1
- காவியலிங்கம் 1
- சங்கரம் 1
- சங்கீரணம் 1
- சந்தயம் 3
- சமாயுதம் 1
- சமுச்சயம் 2
- சிலேடை 18
- சுவை 18
- தடுமாறுத்தி 1
- தற்குணம் 1
- தற்குறிப்பேற்றம் 2
- தற்பவம் 1
- தன்மை 12
- திட்டாந்தம் 1
- தீபகம் 18
- நிந்தாத்துதி 1
- நிரல்நிறை 13
- நெடுமொழி 1
- பரிகாரம் 4
- பரிசங்கை 2
- பரியாயம் 1
- பரிவர்த்தனை 1
- பாவிகம் 1
- பிரத்தியனீகம் 1
- பிரதீபம் 1
- பிறவணி 1
- புகழ்வதின் இகழ்தல் 1
- புணர்நிலை 2
- பொருள்மொழி 1
- மாறுபடு புகழ்நிலை 1
- மின்வருநிலை 3
- முன்னவிலக்கு 21
- வகைமுதலடுக்கு 1
- விசேடம் 6
- விதர்சனம் 2
- விநோத்தி 1
- விபாவனை 4
- விரோதம் 7
- விற்பூட்டு 1
- வேற்றுப்பொருள் வைப்பு 8
- வேற்றுமை 5
மேற்கோள்கள்
- ↑ தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு பாகம் 2 தொகுப்பு மடலம் 14, பக்கம் 411