மாயாப் பிரலாபம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாயாப் பிரலாபம் [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் என்பவரால் எழுதப்பட்டது. 'மாயை' என்னும் பெண் மற்றவர் கற்பித்ததை மறந்துவிட்டுப் புலம்புகிறாள். பிரலாபம் என்பது புலம்புதல். இந்த நூலில் 84 வெண்பாக்கள் உள்ளன. நூல் பல்லமுறை அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலின் சிறப்புப் பாயிரம்

மாயா ப்ரலாபம் என வகுத்துரைத்தோன்
கெடிலப் புனல் சூழ் அதிகைக்கு அதிபன்
ஆழிமேல் மிதந்து காழி மூதூரன் ...
நற் கண்ணுடைத் திருஞானசம்பந்தன்

என இதனைக் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 167. 
"https://tamilar.wiki/index.php?title=மாயாப்_பிரலாபம்&oldid=17475" இருந்து மீள்விக்கப்பட்டது