மாணிக்கம் யோகேஸ்வரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாணிக்கம் யோகேஸ்வரன்
மாணிக்கம் யோகேஸ்வரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மாணிக்கம் யோகேஸ்வரன்
பிறந்ததிகதி 1959
பிறந்தஇடம் மீசாலை
யாழ்ப்பாணம்

இசையமைப்பாளர் ரிச்சர்ட் வாக்னரின் உருவச்சிலைக்கு முன்னால் மாணிக்கம் யோகேஸ்வரன்

மாணிக்கம் யோகேஸ்வரன் (Maanikkam Yogeswaran, பிறப்பு: 1959) இலங்கைத் தமிழரும், பன்னாட்டு தமிழிசைக் கலைஞரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.

யோகா என்று அழைக்கப்படும் மாணிக்கம் யோகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டம், மீசாலையில் பிறந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். இடம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகிறார்.

எஸ். பாலசிங்கம், பி. முத்துகுமாரசுவாமி ஆகியோரிடம் முறைப்படி கருநாடக இசையைக் கற்றுக் கொண்டார். "ஏசியன் ஸ்கூல் ஒஃப் ஆர்ட்ஸ்" என்ற இசைக் கல்லூரியை நடத்தி வருகிறார்.

லண்டனில் இயங்கும் "vocal big band"[1] பரணிடப்பட்டது 2010-03-03 at the வந்தவழி இயந்திரம் என்ற இசைக்குழுவின் உறுப்பினராகவுள்ள இவர், செருமனியின் Dissidenten [2] என்ற உலக இசைக்குழுவில் சேர்ந்து பாடியுள்ளார்.

ஸ்டான்லி குப்ரிக்கின் ஐஸ் வைட் ஷட் (Eyes Wide Shut) என்ற 1999 ஹாலிவுட் திரைப்படத்தில் இவர் பாடிய காதலா, இன்பமா, இது ஒரு நரகமா.. என்ற கருநாடக இசைப் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.[1][2] இதன் மூலம் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பாடலைப் பாடியவர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.[1]

திருக்குறளின் 1330 பாடல்களையும் 133 இராகங்களில் பாடி ஆல்பமும் வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாணிக்கம்_யோகேஸ்வரன்&oldid=8086" இருந்து மீள்விக்கப்பட்டது