மல்லை சத்யா
மல்லை சி. ஏ. சத்யா | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சத்யசீலன் 10.12.1963 குரும்பிறை |
| அரசியல் கட்சி | ம. தி. மு. க. |
| துணைவர் | துர்காசினி[1] |
| பிள்ளைகள் | கீா்த்திவாசன் (மகன்), கண்ணகி (மகள்) |
| கல்வி | சமூகவியலில் முதுகலை பட்டம் |
மல்லை சி. ஏ. சத்யா (Mallai C.E Sathya, பிறப்பு: டிசம்பர் 11, 1963) தமிழ் நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆவார். 10.12.1963-இல், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த குரும்பிறை என்கிற சிற்றூரில் சி. ஏகாம்பரம், நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை
1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் போட்டியிட்டுத் தலைவராக வெற்றி பெற்றார்[2]. 2011 ஆம் ஆண்டு மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாமல்லை பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி துர்காசினியை வெற்றி பெறவைத்தார்.[3]
| ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவீதம் % |
|---|---|---|---|---|---|---|
| 1996 | சட்டமன்றத் தேர்தல் 1996 | மதிமுக | திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி | தோல்வி | 11322 | 9.21%[4] |
| 2001 | சட்டமன்றத் தேர்தல் 2001 | மதிமுக | செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி | தோல்வி | 15617 | 12.95%[5] |
| 2006 | சட்டமன்றத் தேர்தல் 2006 | மதிமுக | எழும்பூர் சட்டமன்றத் தொகுதி | தோல்வி | 31975 | 40 % |
| 2014 | மக்களவைத் தேர்தல் 2014 | மதிமுக | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி | தோல்வி | 207080 | |
| 2016 | சட்டமன்றத் தேர்தல் 2016 | மதிமுக | திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி | தோல்வி | 25539 | 12.7%[6] |
| 2021 | சட்டமன்றத் தேர்தல் 2021 | மதிமுக | மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி | தோல்வி | 83076 | 44.7% |
தமிழ்ப் பணி
இவர் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.[7]
எழுதிய நூல்கள்
- தீண்டாத காதல்
- தமிழர்களின் அறச்சீற்றம்
- மணிமகுடமா முள்கிரீடமா?
- தென் ஆப்ரிக்காவில் திருவள்ளுவர்
- மலேசியா நினைவலைகள்
- வியட்நாம் புரட்சி
மேற்கோள்கள்
- ↑ மதுராந்தகம் (தனி) தொகுதி மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா தினமணி நாளிதழ்
- ↑ "மல்லை சத்யாவின் இன்னொரு முகம்". Archived from the original on 2009-06-29. Retrieved 2012-06-21.
- ↑ "மாமல்லை பேரூராட்சி தலைவர், து.தலைவர் பதவிகளுக்கு...தேர்தல்?:தி.மு.க.,விற்கு கிடைத்த திடீர் பெரும்பான்மையால் திருப்பம்". தினமலர். Retrieved 12 July 2025.
- ↑ "தேர்தல் முடிவுகள் 1996" (PDF). தேர்தல் ஆணையம் (PDF). Retrieved 12 July 2025.
{{cite web}}:|archive-url=requires|archive-date=(help) - ↑ "தேர்தல் முடிவுகள் 2001" (PDF). தேர்தல் ஆணையம் (PDF). Retrieved 12 July 2025.
{{cite web}}:|archive-url=requires|archive-date=(help) - ↑ "தேர்தல் முடிவுகள் 2016" (PDF). தேர்தல் ஆணையம். Retrieved 12 July 2025.
- ↑ "15-வது ஆண்டு விழா: மல்லை தமிழ் சங்கத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து". மாலைமலர். Retrieved 12 July 2025.