மன்னார்குடி ஈசுவரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மன்னார்குடி ஈசுவரன்
மன்னார்குடி ஈசுவரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மன்னார்குடி ஈசுவரன்
பிறந்ததிகதி (1947-04-01)ஏப்ரல் 1, 1947
பிறந்தஇடம் மன்னார்குடி, தமிழ்நாடு,
 இந்தியா

மன்னார்குடி ஈசுவரன் (பிறப்பு:1947) தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சி

மன்னார்குடி ஈசுவரனின் தந்தையாராகிய அப்பையா தீக்சிதர், சமசுகிருத மொழியில் வித்தகராவார். ஈசுவரன் தனது ஆரம்பகால மிருதங்க இசைப் பயிற்சியை குனிசேரி கிருஷ்ணமணி ஐயரிடம் பெற்றார். அதன்பிறகு பாலக்காடு கே. குஞ்சுமணி ஐயரிடமும், குருவாயூர் ஜி. துரையிடமும் தொடர்ந்து கற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இசைப் பணி

1958ஆம் ஆண்டில் தி. பசுபதி என்பவரின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிக்கு மிருதங்கம் வாசித்ததே மன்னார்குடி ஈசுவரனின் முறைப்படியான மேடை அரங்கேற்றமாகும். அனைத்திந்திய வானொலியின் திருச்சி நிலையத்திலும், சென்னை நிலையத்திலும் உயர்நிலை வாத்தியக் கலைஞராக பணியாற்றியுள்ளார். இவரின் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அசுவின் சிறிதரன், முத்ரா பாஸ்கர் ஆகியோராவர்.

விருதுகள்

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மன்னார்குடி_ஈசுவரன்&oldid=7499" இருந்து மீள்விக்கப்பட்டது