மதுவந்தி அருண்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுவந்தி அருண்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 நவம்பர் 1977 (1977-11-06) (அகவை 47)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (2020–தற்போது)
வாழ்க்கை துணைவர்(கள்) வி. அருண்குமார் (மணவிலக்கு)
பிள்ளைகள் 1
படித்த கல்வி நிறுவனங்கள் லயோலா கல்லூரி, சென்னை
தொழில்
  • நடிகை
  • அரசியல்வாதி
  • தொலைக்காட்சி நிகழ்சி வழங்குநர்

மதுவந்தி அருண் என்பவர் இந்தியக் கல்வி ஊக்குவிப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் காலிபர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார்.[1] இவர் இந்தியப் பண்பாட்டு கொண்டாட்டத்தின் ஆதரவாளராக உள்ளார். [2] [3] இவர் சில, நாடகங்களுக்கு நடன இயக்குனரவகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார்.[4][5] [6] 2009 சனவரியில், தி ரிட்ஸ் பேஷன் இதழின் “உமன் ஆப் தி இயர்” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பெண்களில் இவரும் ஒருவர். [7]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் பிரபல நடிகரும் நாடக எழுத்தாளருமான ஒய். ஜி மகேந்திரனின் மகளும், மூத்த நாடக எழுத்தாளர் ஒய். ஜி. பார்த்தசாரதி மற்றும் கல்வியாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதியின் பேத்தியும் ஆவார். திரைப்பட தயாரிப்பாளர் கே. பாலாஜி, நடிகை வைஜெயந்திமாலா, லதா ரஜினிகாந்த் ஆகியோர் அவரது உறவினர்கள். 2016 ஆம் ஆண்டில், இவர் ஒரு நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் வி. அருண்குமாரை மணந்தார், ஆனால் பின்னர் விவாகரத்து பெற்றார் [8]

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புக்கள்
2016 தர்மதுரை காவல்துறை அதிகாரி
2017 கடம்பன்
2017 சிவலிங்கா
2020 தாராளபிரபு

தொலைக்காட்சி தொடர்

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி ஓடை
2018 வாணி ராணி சந்திரிகா தமிழ் சன் தொலைக்காட்சி

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மதுவந்தி_அருண்&oldid=23155" இருந்து மீள்விக்கப்பட்டது