மதுரை வேளாசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரை வேளாசான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 305.

புலவர் பெயர் விளக்கம்

ஆசான் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியன். வேளாசான் = வேள்வி செய்யும் ஆசான். வேள்வி = மக்களுக்குப் பயன்படும் உதவி. போர் நிற்பதற்கு உதவிய பாங்கு பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்த உதவி வேள்விதானே!

புறநானூறு நூலைத் தொகுத்தவர் பாடற்பொருளால் இவருக்குப் பெயர் சூட்டியுள்ளார்

பாடல் சொல்லும் செய்தி

  • திணை - வாகை
  • துறை - பார்ப்பன வாகை (பார்ப்பனன் ஒருவன் தன் செயலால் வெற்றி பெற்றதைக் கூறுவது)

பார்ப்பனின் கோலம்

வயலைக் கொடி போல வாடிய வயிற்றுப் பகுதியை உடையவன் அந்தப் பார்ப்பனன்.
அவன் பயலைப் பார்ப்பான் (பச்சைப் பார்ப்பான்)
அவன் உயவல் ஊர்தியான் (உந்தி உந்தி நடப்பதே அவன் ஊர்தி)

பார்ப்பனன் செயல்

இரவிலே வந்தான்.
ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடம் சென்றான்.
அந்த அரசனிடம் அவன் சொன்ன சொற்கள் சிலவே.

பார்ப்பன வாகை

விளைவு முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.

முற்றுகை விலக்கப்பட்ட நிகழ்வுகள்

மதில் மேல் சாத்தப்பட்டிருந்த ஏணி நீக்கப்பட்டது.
அகழியைக் கடக்கக் கிடத்தப்பட்டிருந்த சீப்பு விலக்கப்பட்டது
போரிடுவதற்காக யானைக்குப் பூட்டப்பட்ட மணி அவிழ்க்கப்பட்டது.

"https://tamilar.wiki/index.php?title=மதுரை_வேளாசன்&oldid=12672" இருந்து மீள்விக்கப்பட்டது