எட்டுத்தொகை தொகுப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சங்க நூல்களை எட்டுத்தொகை என்றும், பத்துப்பாட்டு என்றும் பகுத்துக் காண்கின்றனர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள 10(௧௦) பாட்டுகளும் தனித்தனி முழுமையான பாட்டுகள். எட்டுத்தொகையில் உள்ள எட்டு (௮) நூல்களும் தொகைநூல்கள். அதாவது தொகுக்கப்பட்ட நூல்கள். பல புலவர்கள் பாடிய பாடல்கள் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ளன. ஒவ்வொரு நூலையும் தொகுத்தவர் யார்? தொகுக்க உதவியவர் யார்? என்னும் செய்திகளை இங்குள்ள பட்டியலில் காணலாம்.

தொகைநூல் தொகுத்தவர் தொகுப்பித்தவர் குறிப்பு
அகநானூறு(அகம்), (அகப்பாட்டு), (நெடுந்தொகை) மதுரை உப்புரிகுடி கிழான் மகனாவான் உருத்திர சன்மன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பாடலடி 13 முதல் 31
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார் ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல், 5 திணைக்கும் 500 பாடல்
கலித்தொகை நல்லந்துவனார் புலப்படவில்லை 5 திணைக்கும் கலிப்பாவால் அமைந்த பாடல்கள் உள்ளன
குறுந்தொகை பூரிக்கோ பூரிக்கோ பாடலடி 4 முதல் 8
நற்றிணை தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி பாடலடி 9 முதல் 12
பதிற்றுப்பத்து தெரியவில்லை தெரியவில்லை அரசருக்கு 10 என்ற முறையில் 10 அரசர்கள்மீது 10 புலவர்கள் பாடிய 100 பாடல்கள், (முதல் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை
பரிபாடல் (பரிபாட்டு) கீரந்தையார் தெரியவில்லை திருமால் மீது 8 பாடல், செவ்வேள் மீது 31, காடுகாள்(கொற்றவை) மிது 1, வையை மீது 26, மதுரை மீது 4 - என்று 70 பாடல்கள் இருந்தன.
புறநானூறு (புறம்) தெரியவில்லை தெரியவில்லை புறத்திணைப் பாடல்கள்
"https://tamilar.wiki/index.php?title=எட்டுத்தொகை_தொகுப்பு&oldid=11697" இருந்து மீள்விக்கப்பட்டது