மஞ்சும்மல் பாய்ஸ்
'மஞ்சும்மல் பாய்ஸ்' | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சிதம்பரம் எஸ். பொதுவாள் |
தயாரிப்பு | சௌபின் சாகிர் பாபு சாகிர் ஷான் ஆன்டனி |
கதை | சிதம்பரம் எஸ். பொதுவாள் |
இசை | சுசின் சியாம் |
நடிப்பு | சௌபின் சாகிர் சிறீநாத் பாசி பாலு வர்க்கீசு கணபதி எஸ். பொதுவாள் லால் ஜூனியர் தீபக் பறம்போல் அபிராம் ராதாகிருஷ்ணன் அருண் குரியன் காலித் ரகுமான் சந்து சலீம்குமார் விஷ்ணு ரெகு |
ஒளிப்பதிவு | சிஜு காலித் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | பரவா பிலிம்சு |
விநியோகம் | சிறீ கோகுலம் மூவிசு |
வெளியீடு | பெப்ரவரி 22, 2024 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹238 crore[1] |
மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys), 2024 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையான இது நண்பர்கள் குழுவைச் சுற்றி வருகிறது. தங்கள் விடுமுறையைக் கழிக்க கொடைக்கானல் செல்லும்போது அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கிக் கொள்ளும்போது அவர்களின் விடுமுறை எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. [2]
இத்திரைப்படத்தில் சௌபின் சாகிர், சிறீநாத் பாசி, பாலு வர்கீசு, கணபதி எஸ். பொதுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரகுமான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்துள்ளார். 2023 சனவரியில் கொடைக்கானலில் முதன்மைப் புகைப்படம் எடுத்தல் தொடங்கி, 101 நாட்களுக்குப் பிறகு படபிடிப்பு முடிந்தது.
22 பிப்ரவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [3]
கதைச் சுருக்கம்
கொச்சியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறது. அவர்கள் கொடைக்கானலுக்கு புறப்படுவதற்கு முன், நண்பர் ஒருவர் குணா குகையில், கமல்ஹாசனின் குணா திரைப்படம் படமாக்கப்பட்ட இடத்தைப் பற்றி கூறுகிறார். குடிபோதையில், அதிக மகிழ்ச்சியுடன், நண்பர்கள் குணா குகைக்கு (டெவில்ஸ் கிச்சன்) அருகில் சென்று, குகைகளின் தடைசெய்யப்பட்ட பகுதிகளை தாங்களாகவே ஆராய முடிவு செய்கிறார்கள். பதுங்கியிருக்கும் ஆபத்துகளைப் பற்றி ஏதும் அறியாமல், நண்பர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார்கள். ஒரு கட்டத்தை அடைந்ததும், சுபாசு என்பவர் குகைக்குள் விழுந்து விடுகிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை மீதிக் கதைச் சொல்கிறது.
தயாரிப்பு
இந்த திட்டம் ஆரம்பத்தில் சனவரி 2023 இல் அறிவிக்கப்பட்டது [4] இயக்குநர் சிதம்பரம் என்பவர் ஜன. இ. மேன் (2021) படத்தை இயக்கிய பின்னர், தனது இரண்டாவது படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுள்ளது. [5]
2023 சனவரியில் கொடைக்கானலில் முதன்மை புகைப்படம் எடுக்கத் தொடங்கி, 101 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு படபிடிப்பு முடிவடைந்தது. [6] கொச்சிலும், பெரும்பாவூரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. [7]
இப்படத்திற்கு சுசுன் சியாம் என்பவர் இசையமைத்துள்ளார். இதில் பிரதீப் குமார் மற்றும் ராப்பர் வேடன் பாடிய இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல் வரிகளை அன்வர் அலி மற்றும் வேடன் எழுதியுள்ளனர்.
வரவேற்பு
மஞ்சும்மல் பாய்ஸ் அதன் தொழில்நுட்ப அம்சங்கள், நடிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்காக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Https://https://m.imdb.com/list/ls063689839/
- ↑ "'Manjummel Boys' trailer: A boys' trip to Guna Caves takes a harrowing turn in 'Jan. E. Man' director's next". 10 February 2024. https://www.thehindu.com/entertainment/movies/manjummel-boys-trailer-a-boys-trip-to-guna-caves-takes-a-harrowing-turn-in-jan-e-man-directors-next/article67831906.ece.
- ↑ Praveen, S. R. (22 February 2024). "Immaculately crafted survival thriller". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/manjummel-boys-movie-review-chidambaram-pulls-off-an-immaculately-crafted-survival-thriller/article67874296.ece.
- ↑ "'Jan.E.Man' director Chidambaram's next titled 'Manjummel Boys'". New Indian Express. 6 January 2023.
- ↑ "Soubin Shahir's Manjummel Boys, based on true events, has this thrilling connection to Kamal Haasan's Gunaa". OTT Play.
- ↑ "Jan.E.Man Director Chidambaram's Manjummel Boys Goes On Floors". News 18. 27 January 2023.
- ↑ "Soubin Shahir, Sreenath Bhasi's Manjummel Boys is about travel and friendship". OTT Play.