ப. வெ. நந்திதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ப. வெ. நந்திதா
ப. வெ. நந்திதா
இயற்பெயர்/
அறியும் பெயர்
ப. வெ. நந்திதா
பிறந்ததிகதி ஏப்ரல் 10, 1996 (1996-04-10) (அகவை 28)
பிறந்தஇடம் சங்ககிரி, தமிழ் நாடு, இந்தியா
பணி இந்திய சதுரங்க வீராங்கனை
கல்வி நிலையம் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை, இந்தியா

பள்ளத்தூர் வெங்கடாசலம் நந்திதா (பிறப்பு ஏப்ரல் 10, 1996) ஒரு இந்திய சதுரங்க வீரர் ஆவார். அவர் பிடேயின் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். அவர் இந்தியாவின் 17 வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார். இந்திய பெண் சதுரங்க வீராங்கனைகள் தரவரிசையில் 7 வது இடத்தில் உள்ளார்.

இளமை மற்றும் கல்வி

நந்திதா 10 ஏப்ரல் 1996 இல் தமிழ்நாட்டில் உள்ள சங்ககிரியில் பிறந்தார். அவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியலில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.(2014-17).[1] விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவில் முதலிடம் பெற்று தனது பொறியியல் இடத்தைப் பெற்றார்.

சதுரங்க வாழ்க்கை

2016 ஆம் ஆண்டில் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற U-20 உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் நந்திதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2010 இல் கிரீஸின் ஹல்கிடிகியில் நடைபெற்ற U-14 உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[3] அக்டோபர் 2020 இல், அவர் இந்தியன் பெண்கள் சதுரங்க அணியில் வைசாலி Rameshbabu, பத்மினி, பக்தி குல்கர்னி, மேரி ஆன் கோமசு ஆகியோருடன் இடம் பெற்றார். இந்த அணி பிடே நடத்திய ஆசிய நாடுகள் (பகுதிகள்) இணைய சதுரங்க சாம்பியன்ஷிப் 2020ஐ வென்றது. இந்த போட்டியில் 31 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன.[4]

ஜூன் 2021 நிலவரப்படி,அவருடைய எலோ மதிப்பீடு 2365 ஆகும். இது அவரது தற்போதைய உச்ச மதிப்பீடாகும்.[5] மேலும் இந்திய பெண் சதுரங்க வீரர்களின் தரவரிசையில் 7 வது இடத்தில் உள்ளார்.

ஆண்டு உச்ச மதிப்பீடு தேசிய தரவரிசை (பெண்கள்) சாதனைகள்  
2021 2365 7 மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடமிருந்து "ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்" விருதை 09 பிப்ரவரி 2021 அன்று சென்னை தமிழ்நாடு செயலகத்தில் பெற்றார். [6]
2020 2365 7 ஆசிய ஆன்லைன் நாடுகள் கோப்பையில் தங்கம் வென்றது [4]
2019 2348 10 இந்தியாவின் 17 வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் [7]
2016 2251 14 34 வது உலக ஜூனியர் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்- வெள்ளிப் பதக்கம்
2015 2205 தரவு கிடைக்கவில்லை பெண் சர்வதேச மாஸ்டர் பட்டம்

படங்கள்

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

  1. "Anna University (Men & Women) Teams - Inter University Achievements 2016-17". 2018-05-04. https://www.annauniv.edu/sports/downloads/News/Annual%2520Award%2520Booklet%25202016%2520-%252017%2520%26%25202017-%252018.pdf&ved=2ahUKEwjfx-uY_ZftAhWh7HMBHY0gDYAQFjAIegQIHxAB&usg=AOvVaw1a0cVHQ3ZvZ1K8btYsPNwm. 
  2. chess federation, all india (2016-08-21). "34th World Junior (U-20) Girls Chess Championship 2016". chess-results.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
  3. "World Youth Chess Championships 2010 Open Under 18". wycc2010.chessdom.com. பார்க்கப்பட்ட நாள் 21 November 2010.
  4. 4.0 4.1 "Asian online team chess: India women triumph, men take silver". sportstar.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.[தொடர்பிழந்த இணைப்பு]"Asian online team chess: India women triumph, men take silver"[தொடர்பிழந்த இணைப்பு]. sportstar.thehindu.com.
  5. "Standard Top 100 Women November 2020". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
  6. "Adhiban, Sethuraman, Gukesh, Laxman and Nandhidhaa receive Outstanding Sportsperson award by Tamil Nadu government". Chessbase India. 11 February 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
  7. "India's latest WGM". Chessbase India. 23 March 2015. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
"https://tamilar.wiki/index.php?title=ப._வெ._நந்திதா&oldid=25670" இருந்து மீள்விக்கப்பட்டது