பௌஷ்கர பாஷ்யம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பௌஷ்கர பாஷ்யம் [1] என்பது உமாபதி சிவாசாரியார் பௌஷ்கராகமம் என்னும் வடமொழி நூலுக்கு வடமொழியிலேயே எழுதப்பட்ட உரை நூல். பௌஷ்கராகமம் என்பது சைவத் துணை மறைகளில் [2] ஒன்று. இதன் நான்காவது பாதம் 'பௌஷ்கர சங்கிதை ஞான பாதம்'. இது எட்டுப் படலங்களும் 973 சுலோகங்களும் கொண்டது. இதற்கு உரையாக வடமொழியில் எழுதப்பட்ட நூலே இந்தப் பேருரை. சிதம்பர அம்பலவாண நாவலர் இதனை வெளியிட்டுள்ளார். [3] இந்த நூலுடன் மற்றொரு நூலும் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. [4]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 119. 
  2. உப ஆகமங்களில்
  3. பதிப்பு 1925
  4. வடமொழியில் சிவானந்த தீஷிதர் செய்த 'உமாபதி சிவாசார்ய விசயம்
"https://tamilar.wiki/index.php?title=பௌஷ்கர_பாஷ்யம்&oldid=17468" இருந்து மீள்விக்கப்பட்டது