பொன்மகள் வந்தாள் (2020 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பொன்மகள் வந்தாள்
Official release poster
இயக்கம்செ. செ. பெடிரிக்கு
தயாரிப்புசூர்யா
கதைசெ. செ. பெடிரிக்கு
வசனம்லக்ஷ்மி சரவணக்குமார்
இசைகோவிந்த் வசந்தா
நடிப்புஜோதிகா
ஒளிப்பதிவுராம்சி
படத்தொகுப்புரூபன்
கலையகம்2டி எண்டர்டெயின்மென்ட்
விநியோகம்பிரைம் விடியா
வெளியீடு29 மே 2020 (2020-05-29)
ஓட்டம்120 நிமையங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal) 2020ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை சூரியா தயாரிப்பில் ஜே.ஜே.பிரெட்ரிக் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா, ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன் பிரதாப் போதென் ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் எண்மிய முறையில் 29 மே 2020 அன்று பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

ஊட்டியில் வாழ்ந்துவந்த 'பெட்டிசன்' பெத்துராஜ் 2004ஆண்டினைச் சார்ந்த ஒரு பழைய வழக்கினை மீண்டும் விசாரிக்க வழக்குத் தொடுக்கின்றார். அதில் 'சைக்கோ ஜோதி' என்ற தொடர் கொலையாளி பல குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். பெத்துராஜின் மகளும், இளம் வழக்குரைஞருமான வெண்பா இவ்வழக்கு குறித்த பல உண்மையை வெளிப்படுத்த முற்படுகிறார். இவ்வழக்கின் அரசுத்தரப்பு வழக்குரைஞரும் மாற்றப்படுகின்றார். இதனால் வெண்பா, அரசியல்வாதி வரதராஜன் நியமிக்கும் மற்றொரு வழக்குரைஞரை எதிர்கொள்ள வேண்டியச்சூழல் ஏற்படுகின்றது. வழக்கின் விசாரணையின் போதுதான் வெண்பா ஜோதியின் மகள் என்றும், ஜோதி கொலையாளி இல்லை என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது.

கதைப்பாத்திரங்கள்

பட உருவாக்கம்

ஜோதிகாவின் அடுத்தத் திரைப்படத்திற்கு பொன்மகள் வந்தாள் என்று பெயரிடப்படும் என்று ஜூலை 2019இல் அறிவிக்கப்பட்டது. சொர்க்கம் (1970) பாடலில் இருந்து இத் தலைப்பு பெறப்பட்டது. இது ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தை சூரியா 2 டி என்டர்டெயின்மென்ட் க்காகத் தயாரித்துள்ளார், ராம்ஜி ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கான கதையை எழுதும் போது, ஃபிரடெரிக் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்ட சட்ட ஆலோசகர்களை அணுகி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டுள்ளார். இந்த படம் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழ்த்திரை உலகின் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர்.[2] இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 2019 இல் தொடங்கி நவம்பரில் முடிந்தது.[3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வா செல்லம்"  பிருந்தா சிவக்குமார் 2:38
2. "பூக்களின் போர்வை"  சீன் ரோல்டன், கீர்த்தனா வைத்தியநாதன் 3:49
3. "வான் தூறல்கள்"  சின்மயி 3:29
4. "கலைகிறதே கனவே"  கோவிந்த் வசந்தா 3:12
5. "வானமாய் நான்"  சைந்தவி, கோவிந்த் வசந்தா 2:07

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்