பெருவழுதிக் காசுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருசுனமூர்த்திக்கு இலங்கையில் கிடைத்த பெருவழுதி நாணயம்

பெருவழுதி நாணயம் என்பது சங்ககால பாண்டியர் வெளியிட்ட செப்பு நாணயமாகும். சிலர் மூவேந்தர்களும் குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் மௌரிய பேரரசின் நாணயங்களயே பயன்படுத்தினர் என்றும் கூறி வந்தனர். இந்நாணயம் கிடைப்பத்ற்கு முன் சங்க காலத்தில் பண்ட மாற்று முறையே இருந்ததென்றும் நாணயங்கள் புழக்கத்திலில்லை என்று நிலவி வந்த கருத்து மாறியது.

நாணயம்

1987ஆம் ஆண்டு கிருட்டிணமூர்த்தி என்பவர் பெருவழுதி என தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டு பெயரிட்ட 13 நாணயங்களை வெளியிட்டார். இந்நாணயங்களில் மீன்கள், 1, 2 அல்லது 4 ஆமைகளும், யானை, குதிரை, வேலியிட்ட மரம், காளத்தலை, மூன்று அல்லது ஆறு முகடுகளுடைய மலை, ஆறு புள்ளிகள், சிவலிங்கம், காளை, கோயில் ஆகிய சின்னங்கள் முன் பக்கத்திலும் பெருவழுதி என்று எழுதப்பட்ட எழுத்துக்களுடன் பின் பக்கத்திலும் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் சின்னங்கள் முத்திரை நாணயங்களிலும் காணப்படுகிறது.

காலம்

மூலம் - தினமலர்[1]

இந்த நாணயத்தின் காலம் குறித்து தமிழ் பிராமி எழுத்தறிஞரான ஐராவதம் மகாதேவன் அந்நாணயத்தில் காணப்படும் சொற்றொடரில் பெருவழுதி – பெருவழுதிஸ என்ற இரு பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று கையுடைய சின்னத்தை பிராமி எழுத்தான “ஸ’ என்று தான் கொள்ள வேண்டுமென்றும் அதனால் அதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டென்று கூறினார்.

மத்திய அரசின் முதன்மைத் தொல்லெழுத்து அலுவலரான கே.ஜி.கிருஷ்ணன் இந்த நாணயம் குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். அதன்படி அந்நாணயம் இரு மொழி நாணயமன்று. பிராகிருத வழக்குப்படி முதல் சொற்றொடர் "பெருவழுதிஸ" என்றால் அடுத்த சொற்றொடர் தமிழ் வழக்குப்படி பெருவழுதிக்கு என்றிருக்க வேண்டும். ஆனால் பெருவழுதி என்ற சொல்லுக்குப் பின் எதுவுமில்லை என்பதை கூறினார்.

அதற்பின் 2004ஆம் ஆண்டு கிருட்டிணமூர்த்தி செய்த ஆய்வின்படி இலங்கையின் கொழும்பு நாணயவியல் காப்பாளரான செனரத் விக்ரமசிங்கே மற்றும் ஹெட்டி ஆராச்சி என்ற நாணயவியல் அறிஞர் கொடுத்த பெருவழுதி நாணயங்களின் படி குதிரைச் சின்னம் முன்னங்கால்களின் கீழ் ' எழுத்துப் பொறிக்கப்படவில்லை, மூன்று கைசின்னங்களைத்தான் (Triskle)பொறித்தனர் என்பதை உறுதிப்படுத்தினார். அச்சின்னம் பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டிலே தொடங்குவதால் அதன் காலம் ”பொ.மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு” என்று நிறுவினார்.[2]

மூல நூல்

  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

மேற்கோள்கள்

உசாத்துணை

  • பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், இரா. கிருட்டினமூர்த்தி, சென்னை - 1987.
"https://tamilar.wiki/index.php?title=பெருவழுதிக்_காசுகள்&oldid=42490" இருந்து மீள்விக்கப்பட்டது