பெரியார் ஈ. வெ. இராமசாமியும் இந்திய தேசிய காங்கிரசும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெரியார் ஈ. வெ. இராமசாமியும் இந்திய தேசிய காங்கிரசும், பெரியார் ஈ. வெ. இராமசாமி[1] (17 செப்டம்பர் 1879 – 24 டிசம்பர் 1973), தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களால் நன்கு அறியப்பட்டவர்.[2][3][4] காந்திய சிந்தனையில் ஈர்க்கப்பட்ட ஈ. வெ. இரா தான் செய்து கொண்டிருந்த வணிகத்தை துறந்து, 1919ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார். ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராக இருக்கையில், இந்தியர்கள் ஐரோப்பபிய நிறுவனங்கள் உற்பத்தி செய்த துணிகளை பயன்படுத்துவதை கடுமையாக எதிர்த்து, ஊர் தோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் கதர் துணிகளை விற்பனை செய்தார். மக்கள் மதுப்பழக்கத்திலிருந்து மீள, கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டார். தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தார். சமய மூடநம்பிக்கைகள், சாதி வேறுபாடுகள் மற்றும் பெண்ணடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராடியவர்.

பிரித்தானிய இந்தியா ஆட்சியில் 1921ல் ஈரோட்டில் கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி நாகம்மையார் மற்றும் சகோதரி பாலம்மாவும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போராட்டத்தின் வேகம் கூடியதால் பிரித்தானிய நிர்வாகம் சமரசத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

1920ல் மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஈ. வெ. இராமசாமி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.[5]

1922ல் அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் கூட்டத்தில் ஈ. வெ. இராமசாமி, கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1924 - 1925 ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் எனும் ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் வைக்கம் போராட்டத்தில் பெரியார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாக நிலவி வந்த சாதி பாகுபாடு மற்றும் அலட்சியப்போக்கின் காரணமாக, இவரது சமூக மேம்பாட்டுக்கான சீர்திருத்த திட்டங்கள் தோல்வியில் முடிந்தது. எனவே 1925ல் ஈ. வெ. இராமசாமி காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.[6]

ஒத்துழையாமை இயக்கத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலேயர் மேற்பார்வையில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டு என ஈ. வெ. இராமாசாமி என வலியுறுத்தினார்.[7] இதனால் இந்தியர்கள் மற்றும் இந்தியர்களின் அறக்கட்டளைகள் புதிதாக பள்ளி மற்றும் கல்லூரிகளை நிறுவினர்.

குருகுல நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில், சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் நிதி உதவியில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான வ. வே. சுப்பிரமணியம் அய்யர் நிர்வகித்து வந்த குருகுலப் பள்ளியில், இரண்டு அந்தண மாணவர்களுக்குத் தனியாகவும், அந்தணரல்லாத பிற மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை அறிந்த ஈ. வே. இராமசாமி, மாணவர்களிடையே பாகுப்பாட்டைத் தூண்டும் இத்தகைய போக்குகளை மாற்றிக் கொள்ளக் கோரினார். ஆனால் வ.வே. சுப்பிரமணிய அய்யர் தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுத்ததுடன், சென்னை மாகாண காங்கிரசு கட்சியும், அக்குருகுலப் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்கும் ரூபாய் பத்தாயிரம் நிதியுதவியை நிறுத்த மறுத்தது.

இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1925ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வைதீக மதத்தையும், கடவுள் நம்பிக்கையையும், சாதி வேறுபாடுகளையும், சமய மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். பிராமணர் அல்லாதவர்கள் தங்களையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.

பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்திக்கு, காங்கிரஸ் கட்சியின் நிதியுதவில் வ. வே. சு. அய்யர் நிர்வகிக்கும் இக்குருகுலப் பள்ளியில் நடக்கும் சாதிப் பாகுபாட்டைக் குறித்து கடிதம் எழுதினார். காந்தியடிகளும் இவ்விடயத்தில் வ. வே. சு. அய்யரை கண்டித்தும், அவரது போக்கு மாற்றிக் கொள்ளாததால், பின்னாட்களில் அக்குருகுலப் பள்ளி இழுத்து மூடப்பட்டது. [7]

காங்கிரசை விட்டு வெளியேறுதல்

சனாதன தர்மம் வலியுறுத்தும் நால்வகை சாதிமுறையை காந்தியடிகள் தூக்கிப் பிடித்து ஆதரித்தது மற்றும் அந்தணர்களுக்கு ஆதராகவாக பேசிய காரணத்தால், ஈ. வெ. இராமசாமிக்கு, காந்தி மீது கோபம் ஏற்பட்டது. மேலும் இந்தியாவில் சாதி இந்துக்களால் தீவிரமாக கடைப்பிடிக்கும் தீண்டாமைக்கு ஏதிராக காங்கிரஸ் கட்சியினர் குரல் எழுப்பவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முறையான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பிரித்தானிய இந்திய அரசிடமிருந்து கோரிப் பெறத் தவறிவிட்டது என்று பெரியார் ஈ. வெ. இராமசாமி கருதினார். [8]

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த மாநாட்டில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் பெறும் கடைசி மற்றும் ஆறாவது முயற்சியை பெரியார் செய்தார் 1925ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் மாநாட்டில், ஆறாவது முறையாக இடஒதுக்கீடு திட்டத் தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திரு. வி. கலியாணசுந்தரனார், பெரியார் கொண்டு வந்த இடஒதுக்கீடு தீர்மானத்தை ஏற்க மறுத்தார். எனவே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி அடைந்த பெரியார் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருது விலகினார்.[8]

காங்கிரஸ் கட்சியின் ஆதிக்க சாதியினருக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறுவது குதிரைக் கொம்பு எனக்கருதிய பெரியார், சாதிவாரி இடஒதுக்கீடு தொடர்பாக, பிரித்தானிய இந்திய அரசின் சென்னை மாகாணா ஆளுநரிடன் கலந்து பேசி வலியுறுத்தியதன் விளைவாக, ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுக் கொள்கை தொடர்பான அரசாணை, 15 டிசம்பர் 1928 அன்று, பிரித்தானிய இந்திய அரசின் சென்னை மாகாண ஆளுநர் அரசிதழில் வெளியிட்டார்.[7]

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலோனர் பிராமணர் மற்றும் ஆதிக்கச் சாதியினர் என்று கருதினர். காங்கிரஸ் மாநாட்டு மேடைகளில் மேல் சாதியினர் மட்டும் அமர அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்டத் தொண்டர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களின் இந்த அணுகுமுறையால் பெரியார் மிகவும் வெறுப்படைந்தார். [9]

மேற்கோள்கள்

  1. A biographical sketch பரணிடப்பட்டது 10 சூலை 2005 at the வந்தவழி இயந்திரம்
  2. Thomas Pantham; Vrajendra Raj Mehta; Vrajendra Raj Mehta (2006). Political Ideas in Modern India: thematic explorations. Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0761934200. https://books.google.com/books?vid=ISBN0761934200&id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=2MFf1OTrHpydPFBq6ZS4SdlaHjs. 
  3. N.D. Arora/S.S. Awasthy. Political Theory and Political Thought. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8124111642. https://books.google.com/books?vid=ISBN8124111642&id=szBpnYfmH0cC&pg=PA425&lpg=PA425&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=zyuKCxtk4jFplHL8Y_JeaiDUb94. 
  4. Thakurta, Paranjoy Guha and Shankar Raghuraman (2004) A Time of Coalitions: Divided We Stand, Sage Publications. New Delhi, p. 230.
  5. "Biography of Periyar E.V. Ramasami (1879–1973)". Bharathidasan University. 2006 இம் மூலத்தில் இருந்து 14 ஜூன் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070614223845/http://www.evrperiyar-bdu.org/biography.htm. பார்த்த நாள்: 6 September 2008. 
  6. Kandasamy, W.B. Vansantha; Florentin Smarandache; K. Kandasamy (2005). Fuzzy and Neutrosopohc Analysis of Periyar's Views on Untouchability. HEXIS: Phoenix. பக். 106. https://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1. 
  7. 7.0 7.1 7.2 Gopalakrishnan, Periyar: Father of the Tamil race, pp. 14–17.
  8. 8.0 8.1 Gopalakrishnan, Periyar: Father of the Tamil race, pp. 10 & 11.
  9. NCERT Class VIII History, Chapter-9, Page-119