பூஜா சித்கோபேகர்
பூஜா சித்கோபேகர் | |
---|---|
மிஸ் எர்த் 2007 போட்டியில் பூஜா | |
பிறப்பு | பூஜா சித்கோபேகர் மன்செஸ்டர்[1] |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் |
|
முக்கிய போட்டி(கள்) | மிஸ் எர்த் 2007 (மிஸ் எர்த்—ஏர் 2007) |
பூஜா சிட்கோபேகர் ( Pooja Chitgopekar ; பிறப்பு 1985) நவம்பர் 11 அன்று நடந்த சர்வதேச மிஸ் எர்த் 2007 அழகுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் 2007 இல் மிஸ் எர்த் ஏர் பட்டத்தை வென்றார்.[2]
மும்பையில் பெமினா இந்தியாவால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மூன்று பட்டங்களில் ஒன்றான மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை வென்றார்; மற்ற இரண்டு பட்டங்களும் பூஜா குப்தா, மிஸ் இந்தியா யுனிவர்ஸ் மற்றும் சாரா-ஜேன் டயஸ் மிஸ் இந்தியா வேர்ல்டுக்கு சென்றன. மிஸ் எர்த் 2006 இல் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்த அம்ருதா பட்கி அவர்களால் முடிசூட்டப்பட்டார். அம்ருதாவைப் போலவே, மிஸ் எர்த் போட்டியில் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
சொந்த வாழ்க்கை
பூஜா 2011 இல் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில்மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் பெற்றார் [3]
ஜனவரி 7, 2011 அன்று சிகாகோவைச் சேர்ந்த ஏவிஜி அட்வான்ஸ்டு டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவரான விக்ரம் குமாரை மணந்தார். [4] இவர்களது திருமணம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடந்தது. [5] பூஜா தற்போது சிகாகோவில் மருத்துவரக பணி புரிகிறார்.
சான்றுகள்
- ↑ "India Times". Archived from the original on 6 January 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2008.
- ↑ Kesharwani, Manoj (19 October 2007). "Pooja Chitgopekar". Times of India. http://photogallery.indiatimes.com/beauty-pageants/miss-india/Pooja-Chitgopekar/articleshow/2475038.cms.
- ↑ "Pooja Chitgopekar". veethi.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
- ↑ "Real Wedding: Vikram Kumar and Pooja Chitgopeker (2)". www.indianweddingsite.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
- ↑ "Vikram Wedding In Nz Indian Wedding An 'opportunity To Put Nz On The Map'". World News (in English). பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
வெளி இணைப்புகள்
- Miss Earth official website
- Miss India - Official website பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம்
- Miss India - Profile பரணிடப்பட்டது 2011-04-16 at the வந்தவழி இயந்திரம்
- Indiatimes - Profile