புஷ்பலீலாவதி
Jump to navigation
Jump to search
புஷ்பலீலாவதி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
புஷ்பலீலாவதி |
---|---|
பிறந்ததிகதி | 1947 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
புஷ்பலீலாவதி (பி: 1947) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் பாவை, நாகலட்சுமி போன்ற புனைப்பெயர்களால் நன்கறியப்பட்டவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "ஞானப் பூக்கள்" (சிறுகதைத் தொகுப்பு)
- "கோடுகள் கோலங்களானால்" (குறுநாவல்கள் - 1997)
பரிசில்களும், விருதுகளும்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
- மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளார்.
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் புஷ்பலீலாவதி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்