புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் | |
---|---|
புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் | |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | புன்னை வனம் |
பெயர்: | புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | புன்னைநல்லூர் |
அஞ்சல் குறியீடு: | 613501 |
ஏற்றம்: | 66 m (217 அடி) |
ஆள்கூறுகள்: | 10°47′07.3″N 79°11′22.4″E / 10.785361°N 79.189556°ECoordinates: 10°47′07.3″N 79°11′22.4″E / 10.785361°N 79.189556°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முத்துமாரியம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | ஆடி முத்துப்பல்லக்கு, ஆவணி தேர், புரட்டாசி தெப்பம் திருவிழாக்கள்
தல விருட்சம் : வேம்பு, புன்னை மரம் தீர்த்தம் : வெல்லகுளம் |
உற்சவர் தாயார்: | முத்து மாரியம்மன் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | புராதனக் கோவில் |
அமைத்தவர்: | சோழர்கள் மராட்டியர்கள் |
புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், மாரியம்மன்கோயில் ஊராட்சியில் புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.
தேவஸ்தான கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1][2]
பிற சன்னதிகள்
முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.
கோயில் உருவாக்கம்
சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் மராட்டிய மன்னர்களால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.[3][4][5]
வழிபாட்டு முறைகள்
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது.[6]
கும்பாபிஷேகம்
கி.பி.1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. கி.பி.1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.[7]
விழாக்கள்
- ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.
- ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.
- ஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.
- புரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.
அருகிலுள்ள கோயில்
படத்தொகுப்பு
- Punnai nallur 2.jpg
கோயில் நுழைவாயில்
- Mariammankovil4.jpg
கோயில் வளைவு
- Mariammankovil2.jpg
மூலவர் விமானம்
- Punnai nallur 03.jpg
உள் மண்டபம்
- Punnai nallur 04.jpg
உள் மண்டபம்
- Mariammankovil1.jpg
கோயில் குளம்
மேற்கோள்கள்
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.80
- ↑ J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.80
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1025662
- ↑ http://www.divinebrahmanda.com/2011/10/punnainallur-muthumari-amman-temple.html
- ↑ "நோய்களுக்கு மருந்தாகும் புற்று மண்". ஆனந்த விகடன்.
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004