புத்தமத கண்டன நூல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புத்த மதக் கருத்துகளைக் கண்டித்து மாறுபட்ட விளக்கங்களைத் தரும் நூல்களை மு. அருணாசலம் புத்தமத கண்டன நூல் என்னும் தலைப்பின் கீழ் விளக்குகிறார். [1] நீலகேசி உரை, குண்டலகேசி உரை என்னும் இரண்டு உரை நூல்களும் புத்த சமயக் கருத்துக்களை மறுப்பதற்கு என்றே எழுதப்பட்டவை.

நீலகேசி உரையில் புத்த சமயக் கருத்துக்களைக் கண்டிக்கும் வெண்பாக்கள் 19 உள்ளன.

எடுத்துக்காட்டு [2]

1

விதியால வருவது அல்லால் மேதக்கோர் தங்கள்
மதியினால் வாழ்வது ஒன்று உண்டோ - பதிதொறும்
சங்கரனும் ஐயம் மேற்கொண்டு உண்டான் தடம் கடல் சூழ்
மங்கையுடன் காடு உறைந்தான் மால்.

2

தனக்கும் பிறர்க்கும் பயனின்றிப் புத்தன்
எனைத்துத் துயரும் உழத்தல் - கணப் பிணியின்
நீங்கித் தன் கூத்தி குலத்தான் என ஆதல்
தூங்கத் தலை அரிந்து அற்று.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 308. 
  2. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை
"https://tamilar.wiki/index.php?title=புத்தமத_கண்டன_நூல்&oldid=17458" இருந்து மீள்விக்கப்பட்டது