பி. என். மேனன் (இயக்குநர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பி.என். மேனன் (P. N. Menon) அல்லது பாலிசேரி நாராயணன்குட்டி மேனன், (பிறப்பு:1928 - இறப்பு: 2008 செப்டம்பர் 9 ) இந்திய மொழியான மலையாளத் திரைப்படங்களின் இயக்குநர் மற்றும் கலை இயக்குநருமாவார்.[1] இவர் விளம்பர சுவரொட்டிகளின் வடிவமைப்பாளராகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். மேனன், மற்றொரு பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் பரதனின் தந்தைக்கு சகோதரர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

கேரளாவின் வடக்கஞ்சேரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், திருச்சூரில் கல்வி கற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஓவியப்பள்ளியில் பயின்றார். தனக்கு 20 வயதாக இருந்தபோது சென்னைக்கு வந்தார். அவருக்கு சென்னையில் எந்த வேலையும் கிடைக்கவில்லை, எனவே சேலம் சென்று ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் சேர்ந்தார். ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, படப்பிடிப்பு அரங்கம் மூடப்பட்டதால் மீண்டும் சென்னை திரும்பினார். அவர் மீண்டும் ஓவியங்களில் கவனம் செலுத்தினார். பின்னர் பத்திரிகை அட்டைகளுக்கு வடிவமைப்பில் ஈடுபட்டார். அவரது வடிவமைப்பு பணிகளில் ஒன்று தயாரிப்பாளர் பி. நாகி ரெட்டியின் பத்திரிகைகளில் ஒன்றாகும். நிறுவனம் அவரது திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டது. அவர்கள் 1951 ஆம் ஆண்டில் வாகினி படப்பிடிப்பு அரங்கத்தை வாங்கியபோது, நாகி ரெட்டியின் மகன் அவரை ஓவியத் துறையில் ஊதியம் பெற்ற பயிற்சியாளராக நியமித்தார்.

அப்போதைய ஆந்திர முதல்வரின் மகள் தயாரித்த ஆங்கில நாடகத்தில் கலை இயக்குநராக வேலை கிடைத்தது. அவர்கள் தில்லியில், அப்போதைய துணைத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், மற்றொருவர் பிரதமர் சவகர்லால் நேருவுக்கும், மூன்றாவது ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பாவுக்கும் என மூன்று நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தனர். நினமனிஞ்சா கல்பதுக்கல் என்ற மலையாள திரைப்படத்தில் கலை இயக்குனராக அறிமுகமாகி, 60களில் ரோஸி (1965) என்றத் திரைப்படத்துடன் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.[2]

தொழில்

எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்ட மேனனின் ஒலவம் தீரவம் திரைப்படம், 1970 இல் வெளியிடப்பட்டது. இது சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது. எம்.டி. வாசுதேவன் நாயரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட குட்டியாததி (மூத்த சகோதரி) திரைப்படம், மேனனின் சிறந்த படமாகக் கருதப்படுகிறது.

மலயாட்டூர் ராமகிருஷ்ணனின் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்ட செம்பருத்தி திரைப்படம், அவரது மிக வெற்றிகரமான வணிகப் படமாக இருந்தது. மேலும் ராகவன், சுதிர் மற்றும் ரோஜா ரமணி (சோபனா) போன்ற புதியவர்களுடன் மது மற்றும் ராணி சந்திரா போன்ற மூத்த நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். அவர் இயக்கிய காயத்ரி என்ற மலயாட்டூர் ராமகிருஷ்ணனின் மற்றொரு திரைக்கதைக்கு தேசிய ஒருங்கிணைப்புக்கான ஜனாதிபதியின் சிறப்பு திரைப்பட விருது பதக்கம் வழங்கப்பட்டது. மேனனின் திரைப்படமான மலாமுகலிலே தெய்வம் தேசிய விருதை வென்றுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2004இல் நேருக்குநேரே ("பேஸ் டு பேஸ்") என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

அவரது மனைவியின் பெயர் பாரதி மேனன், அவர்களுக்கு ராஜஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். பிரபல திரைப்பட இயக்குனர் பரதன் அவரது அண்ணன் மகன் ஆவார். அவருக்கு திரைப்பட இயக்கம் பற்றிய பயிற்சியை அளித்தார். பரதன் தனது சிறிய தந்தையைப் போலவே திரைப்படத்துறையில் புகழ் பெற்றார்.

இறப்பு

தனது கடைசி ஆண்டுகளில், மேனன் தனது மகளுடன் கொச்சியில் வசித்து வந்தார். இந்த காலகட்டத்தில் அல்சைமர் நோயால் அவதிப்பட்டார். இறுதியாக, அவர், 2008 செப்டம்பர் 9 அன்று தனது 82 வயதில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4][5] அடுத்த நாள் இரவிபுரம் மயானத்தில் அவருடைய உடல் முழு மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.

விருதுகள்

  • 1970 - சிறந்த படம் : ஒலவம் தீரவம்
  • 1972 - இரண்டாவது சிறந்த படம் : செம்பருத்தி
  • 1973 - இரண்டாவது சிறந்த படம்: காயத்ரி
  • 1983 - சிறப்பு ஜூரி விருது : மலாமுகலிலே தெய்வம்
  • 2001 - ஜே.சி. டேனியல் விருது

தேசிய திரைப்பட விருதுகள்

  • 1973 - மலையாளத்தில் சிறந்த திரைப்படம் : காயத்ரி
  • 1983 - மலையாளத்தில் சிறந்த திரைப்படம்: மலாமுகலிலே தெய்வம்

குறிப்புகள்

  1. http://www.malayalachalachithram.com/profiles.php?i=2289
  2. http://in.rediff.com/entertai/1998/sep/07menon.htm
  3. http://in.movies.yahoo.com/news-detail/33382/Veteran-Malayalam-filmmaker-P-N-Menon-dead.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Archived copy". Archived from the original on 13 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 25 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://tamilar.wiki/index.php?title=பி._என்._மேனன்_(இயக்குநர்)&oldid=21132" இருந்து மீள்விக்கப்பட்டது