பிரீத்தி பருவா
Jump to navigation
Jump to search
பிரீத்தி பருவா (Preeti Barua, அசாமி: প্ৰীতি বৰুৱা) என்பவர் இலக்கியவாதியும், கல்வியாளரும் ஆவார். ரத்தசக்ரா என்ற மராட்டிய நூலை அசாமிய மொழிக்கு மொழிபெயர்த்து, சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் அசாம் மகளிர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் ஹாண்டிக் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர்.[1] இவர் நிரர்தக் என்ற கதைத் தொகுப்பை எழுதியுள்ளார். பிற மொழிகளில் இருந்து இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[1]
இவர் ஹீரேன் பட்டாச்சாரியா என்ற கவிஞரின் சகோதரி. இவர் 2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் ஏழாம் நாளில் இறந்தார்.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "பிரபல எழுத்தாளரான பிரீத்தி பருவா மறைந்தார் - [[அசாம் டிரிபியூன்]]". Archived from the original on 2015-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.