பிரான்சுவா குரோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிரான்சுவா குரோ (François Gros, திசம்பர் 17, 1933 - ஏப்ரல் 25, 2021) பிரான்சியத் தமிழாய்வாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் 1977 முதல் 1989 வரை பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். 1960 இல் இருந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவந்த இவர் பாரிசுப் பல்கலைக்கழகத்தின் உயர் ஆய்வு நிறுவனத்தில் (Ecole Pratique Des Hautes Etudes) தென்னிந்திய வரலாறும் மொழியியலுக்குமான துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பிரெஞ்சு, ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

பிரான்சுவா குரோ பிரான்சின் லியோன் நகரில் 1933 இல் பிறந்தார். லியோன் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்து, 1957 இல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அவர் இந்தியவியலில் தனது ஆர்வத்தைத் திருப்பினார். பாரிசில் உள்ள இனால்கோ நிறுவனத்தில் தமிழ் கற்றார். பரிபாடல் பற்றிய தனது ஆய்வை பேராசிரியர் சான் பில்லியோசாட் என்பவரின் கீழ் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.[2] பரிபாடலைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து 1968 இல் வெளியிட்டார்.

1963 இல் இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள பிரான்சிய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு மாணவராக இணைந்தார். 1967 முதல் 1977 வரை முதல் உறுப்பினராக இருந்த பிரான்சுவா குரோ, 1977 சூலை 1 முதல் 1989 நவம்பர் 20 வரை பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்தின் (EFEO) இயக்குநராகவும் இருந்துள்ளார். செவ்வியல் மற்றும் நவீன தமிழ் இலக்கியங்கள் குறித்த பல படைப்புகளை பிரான்சுவா குரோ எழுதியுள்ளார்.

பிரான்சுவா குரோ 1979 ஆம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள தமிழ் ஆய்வுகளுக்கான பன்னாட்டு நிறுவனத்தின் ஆளுநர் குழுவில் இந்தியர் அல்லாத ஒரே ஒரு உறுப்பினராக இருந்துள்ளார். 1989 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து செயல்பட்டார்.[3] உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்திலும் கலந்துகொண்டு கட்டுரைகள் படித்தார்.

பாரிசில் இவரிடம் பல மாணவர்கள் தமிழ் கற்றனர். நோர்வே உள்ளிட்ட பிறநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1]

ஆக்கங்கள்

  • திருக்குறளின் காமத்துப்பால் பகுதியைக் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து 1993 இல் வெளியிட்டார்.[1]
  • காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார்.[1]
  • தி. வே. கோபாலையருடன் இணைந்து பண்முறையில் அமைந்த தேவாரப் பதிப்பை வெளியிட்டுள்ளார்.[1]
  • வார்ப்புரு:Fr Le Paripātal, introduction, traduction et notes par François Gros, Publications de l'Institut français d'Indologie, வார்ப்புரு:Numéro, Pondichéry, 1968 (prix Saintour en 1969).
  • வார்ப்புரு:Fr Tiruvalluvar, Le Livre de l'Amour, traduit et annoté par François Gros, Connaissance de l'Orient, Collection UNESCO d'œuvres représentatives, Gallimard, Paris, 1992.
  • வார்ப்புரு:Fr L’arbre Nâgalinga, nouvelles choisies et traduites du tamoul par François Gros et M. Kannan, avant propos et postface de François Gros, Éditions de l'Aube, La Tour d'Aigues, 2002.
  • வார்ப்புரு:Fr Sampath et alii, Le sage se rend au zoo, nouvelles choisies et traduites du tamoul par François Gros et M. Kannan, postface de François Gros, Éditions de l'Aube, La Tour d'Aigues, 2002.
  • வார்ப்புரு:Fr Vêlarâmamûrti et alii, Les 21 chevreaux d'Iralappa Câmi, nouvelles choisies et traduites du tamoul par François Gros et M. Kannan, postface de François Gros, Éditions de l'Aube, La Tour d'Aigues, 2002.
  • (fr) G. Nagarajan, Le vagabond et son ombre, romans et récits tamouls présentés et traduits par François Gros avec le concours d'Elisabeth Séthupathy, introduction par M., Kannan, Institut Français de Pondichéry, Regards sur l'Asie du Sud/South Asian Perspectives-2, 2013
  • (fr) C.S. Chellappa, Vâdivâçal, Des taureaux et des hommes en pays tamoul, traduit du tamoul et présenté par François Gros, Regards sur l'Asie du Sud/ South Asian Perspectives - 3, Institut Français de Pondichéry, 2014.
  • François Gros, Deep Rivers, Selected writings on Tamil Literature, traduction par by M.P. Boseman, édité par M.Kannan, Jennifer Clare, Institut Français de Pondichéry, Publications Hors Série 10, Tamil Chair, Department of South and Southeast Asian Studies, University of California at Berkeley, 2009.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 இளங்கோவன், மு. (7 திசம்பர் 2008). "அறிஞர் பிரான்சுவா குரோ (17.12.1933)". பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2021.
  2. "Le paripātal / François Gros ; dir. de recherche M. Jean Filliozat - Sudoc". www.sudoc.fr. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
  3. Notice François Gros sur le site Internet de l'EFEO
"https://tamilar.wiki/index.php?title=பிரான்சுவா_குரோ&oldid=26161" இருந்து மீள்விக்கப்பட்டது