பிரபாகரன் பரமேசுவரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு
பிரபாகரன் பரமேசுவரன்
Yang Berhormat Tuan
Prabakaran Parameswaran

Member of Parliament
கோலாலம்பூர் பத்து தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு
மித்ரா தலைவர்[1]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 பிப்ரவரி 2024
பிரதமர் அன்வர் இப்ராகீம்
அமைச்சர் ஆரோன் அகோ டகாங்
தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர்
முன்னவர் ரமணன் ராமகிருஷ்ணன்
பத்து தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 மே 2018
முன்னவர் சுவா தியான் சாங் (Chua Tian Chang)
(பாக்காத்தான்பி.கே.ஆர்)
பெரும்பான்மை 24,438 (2018)
22,241 (2022)
தலைவர் மக்கள் நீதிக் கட்சி; பத்து மக்களவை தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 சூலை 2022
குடியரசுத் தலைவர் அன்வர் இப்ராகீம்
துணை முகமது அபீஸ் சுல்கபிலி
முன்னவர் சுவா தியான் சாங்
மலேசிய கூட்டரசு பகுதி மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர்
பதவியில்
20 பெப்ரவரி 2020 – 27 ஆகஸ்டு 2022
குடியரசுத் தலைவர் அன்வர் இப்ராகீம்
தேசிய இளைஞர் தலைவர் அக்மல் நசுருல்லா முகமட் நசீர்
(2020–2022)
ஆடம் அட்லி
(2022)
மலேசிய கூட்டரசு பகுதி தலைவர் ஜாகிர் அசன்
(2020–2022)
ராபிசி ராம்லி
(2022)
முன்னவர் நாயிம் பிரண்டேஜ்
பின்வந்தவர் முகமது அசிபர் ஆசா அசார்
தனிநபர் தகவல்
பிறப்பு பிரபாகரன் பரமேசுவரன்
8 பெப்ரவரி 1996 (1996-02-08) (அகவை 28)
பத்து, கோலாலம்பூர், மலேசியா
குடியுரிமை மலேசியா
தேசியம் மலேசியர்
அரசியல் கட்சி (பி.கே.ஆர்)
(2018 தொடக்கம்)
சுயேச்சை
(2018)
பிற அரசியல்
சார்புகள்
பாக்காத்தான்
(2018 தொடக்கம்)
படித்த கல்வி நிறுவனங்கள் பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி
பணி அரசியல்வாதி
தொழில் மாணவர்

பிரபாகரன் பரமேசுவரன் (ஆங்கிலம்; மலாய்: Prabakaran Parameswaran; சீனம்: 巴拉峇卡兰) என்பவர் 2018 மே மாதம் முதல் கோலாலம்பூர் பத்து மக்களவைத் தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார். மலேசிய அரசியல் வரலாற்றில், 22 வயதில் மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனும் சாதனையும் படைக்கிறார்.[2]

மலேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா (Malaysian Indian Community Transformation Unit) (MITRA) அமைப்பின் சிறப்புத் தலைவராக, 2024 பிப்ரவரி மாதம் முதல் பதவி வகிக்கின்றார்.[3][4] [5]

பாக்காத்தான் கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரான அவர், மக்கள் நீதிக் கட்சியில் சேருவதற்கு முன்பு சுயேச்சையாக இருந்தார். தற்போது பி.கே.ஆர் கட்சியின் மலேசிய கூட்டரசு பகுதி இளைஞர் பிரிவு தலைவராகப் பொறுப்பு வகிக்கும் இவர், பத்து மக்களவை தொகுதியில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.[6]

பொது

மலேசிய வரலாற்றில் மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளையவர் எனும் பெருமை இவரைச் சாரும். பிரபாகரன் பரமேசுவரன், மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட போது வயது 22. தற்போது இவருக்கு வயது 28.

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை பட்டாணி மக்களவை தொகுதியில் முகமது தௌபிக் சொகாரி எனும் மற்றோர் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் வயது 22. பிரபாகரன் பரமேசுவரனை விட ஒரு மாதம் இளையவர் ஆவார்.

2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் மலேசிய மக்களவையில் இளைய மக்களவை உறுப்பினர் என அறியப்படுகிறார்.

வாழ்க்கை

மலேசியா, கோலாலம்பூர், பத்துவில் 1996-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார். அங்கேயே வாழ்ந்து வளர்ந்தார். பிரபாகரன் தமது பள்ளி நாட்களில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டினார். நாடாளுமன்ற விவாதங்களைப் பார்க்கவும்; செய்தித்தாள்களைப் படிக்கவும் அவரின் தந்தையார் அவரை வற்புறுத்தினார். பிரபாகரன் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை.

இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொள்ளத் தொடங்கினார். பின்னர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போடு அரசியல் கருப்பொருள்கள் கொண்ட பற்பல விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

அரசியல் வாழ்க்கை

2018-இல் பத்து மக்களவை வேட்பாளர்

பிரபாகரன் தொடக்கத்தில் கோலாலம்பூர் பத்து மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். பத்து மக்களவை தொகுதி மலேசியாவில் பிரபலமான தொகுதியாகும். அந்தக் கட்டத்தில் பாக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த மலேசிய அரசியல் பெரும்புள்ளி சுவா தியான் சாங் Chua Tian Chang) என்பவரை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

13-ஆவது தேர்தலில் சுவா தியான் சாங் அதே பத்து மக்களவை தொகுதியில் 41,672 வாக்குகள் பெற்று பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றவராகும். இவரைத் தவிர பாரிசான் கூட்டணியைச் சேர்ந்த் டோமினிக் லாவ் கோ சாய் (Dominic Lau Hoe Chai) என்பவரையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இவரும் 13-ஆவது தேர்தலில் அதே பத்து மக்களவை தொகுதியில் 28,388 வாக்குகள் பெற்றவராகும்.

அத்துடன் பாஸ் (PAS) கட்சியில் இருந்து அசார் யாகயா என்பவரையும்; சுயேச்சை வேட்பாளர் பஞ்சமூர்த்தி முத்துசாமி என்பவரையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது.

சுவா தியான் சாங்

இருப்பினும் 2 மார்ச் 2018 அன்று, வேட்பாளர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது சுவா தியான் சாங் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. சா ஆலாம் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. பத்து மக்களவைத் தேர்தல் அதிகாரி அன்வர் முகமட் சைன் அவர்களின் இறுதி முடிவாக பத்து மக்களவை தொகுதி தேர்தலில் சுவா தியான் சாங் போட்டியிடத் தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரு காவல் துறை அதிகாரியை அவமானப் படுத்தியதற்காக சா ஆலாம் உயர் நீதிமன்றத்தில், ஏற்கனவே சுவா தியான் சாங்கிற்கு RM 2,000 அபராடம் விதிக்கப்பட்டு இருந்தது.

பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரங்கள்

அதன்பிறகு, பாக்காத்தான் கூட்டணி சார்பில் போட்டியிட பிரபாகரன் தன்னை முன்நிலைப் படுத்தினார். பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் ஏற்கனவே பி.கே.ஆர் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர்.[7] சுவா தியான் சாங், பிராபகரனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, பிரபாகரனுக்கு ஆதரவாகப் பிரசார முயற்சிகளில் ஈடுபட்டு பிரபாகரனுக்கு சுவா உதவினார்.

பத்து மக்களவை தொகுதியில் பாரிசான் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்காக அது அமைந்தது. பிரபாகரனைப் பாராட்டிப் பேசும் போது சுவா தியான் சாங் கூறியது; "நீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்; ஆனால் பிரபாகரன் இளமையாகவும், ஆற்றல் மிக்கவராகவும், இலட்சியவாதியாகவும் இருக்கிறார்; அவரை பி.கே.ஆர் கட்சியின் ஓர் ஆர்வலராக மாற்றலாம் என்று நாங்கள் நம்புகிறோம்".

தேர்தல் முடிவு

மலேசியாவின் 13-ஆவது மக்களவை தேர்தல் 2018 மே 9-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில், பத்து தொகுதியை பாக்காத்தான் மற்றும் பி.கே.ஆர் உதவியுடன் பிரபாகரன் வென்றார். தமக்கு எதிரான மூன்று வேட்பாளர்களையும் தோற்கடித்தார்.

62,805 வாக்களார்களைக் கொண்ட பத்து மக்களவை தொகுதியில்; பிரபாகரன் 24,438 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 38,125. மலேசியாவின் 13-ஆவது மக்களவை தேர்தலில் இந்த தொகுதி, ஒட்டு மொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்த தொகுதி என்றும் அறியப்படுகிறது.

முன்னுரிமைகள்

வெற்றிக்குப் பிறகு, பத்து மக்களவை தொகுதியில் தன் முன்னுரிமைகளை அறிவித்தார்;

  • இளைஞர்களின் உரிமைகளுக்காகப் போராடுதல்
  • இளம் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்
  • வாக்களிக்கும் வயதை 21-இல் இருந்து 18-ஆக குறைத்தல்
  • பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
  • நகரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்றுதல்
  • இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியை மேம்படுத்துதல்

அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்தும் கொள்கையின் அடிப்படையில்; இளைஞர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.[8]

2018 மே 13-ஆம் தேதி, அவர் பாக்காத்தான் கூட்டணியின் பி.கே.ஆர் கட்சியில் சேர்ந்தார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதை உள்ளூர் மக்களுடன் கொண்டாடும் நிகழ்வு கோலாலம்பூர்; செந்தூல் வளாகத்தில் நடைபெற்றது.

அவரின் வெற்றியைத் தொடர்ந்து, 22 வயதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நபர் என்ற வரலாற்றையும் சாதனையையும் பிரபாகரன் படைத்தார். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர், இரண்டாம் ஆண்டு சட்டத் துறை மாணவராக இருந்தார். பகுதி நேர அடிப்படையில் தமது படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

தேர்தல் முடிவுகள் (2018; 2022)

மலேசிய நாடாளுமன்றம்
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2018 P115 பத்து பிரபாகரன் பரமேசுவரன் (சுயேச்சை) 38,125 60.70% டோமினிக் லாவ் கோ சாய் (கெராக்கான்) 13,687 21.79% 62,805 24,438 83.32%
அசார் யகாயா (பாஸ்) 10,610 16.89%
பஞ்சமூர்த்தி முத்துசாமி (சுயேச்சை) 383 0.61%
2022 பிரபாகரன் பரமேசுவரன் (பி.கே.ஆர்) 45,716 52.46% அசார் யகாயா (பாஸ்) 23,475 26.94% 87,841 22,241 76.54%
கோகிலன் பிள்ளை (மஇகா) 10,398 11.93%
சுவா தியான் சாங் (சுயேச்சை) 4,603 5.28%
வான் அசுலியானா வான் அட்னான் (பெஜுவாங்) 849 0.97%
சித்தி சபேதா காசிம் (சுயேச்சை) 653 0.75%
நூர் பாத்தியா சியாசுவானா சகாருதீன் (சுயேச்சை) 628 0.72%
நாகநாதன் பிள்ளை (வாரிசான்) 525 0.66%
சுல்கிப்லி அப்துல் பட்லான் (மமக) 137 0.16%
தூ செங் உவாட் (சுயேச்சை) 112 0.13%

மேற்கோள்கள்

  1. "Member of Parliament for Batu, Prabakaran Parameswaran was appointed as the Chairman of the Special Task Force Committee of the Indian Community Transformation Unit (MITRA) with immediate effect". பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  2. Asia, Tatler. "For coming from nowhere to become Malaysia's youngest parliamentarian". Tatler Asia (in English). பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  3. "Batu MP Prabakaran appointed new Mitra chairman". The Star. 7 February 2024. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  4. FUAD, MUHAMMAD NAJIEB AHMAD (7 February 2024). "Batu Member of Parliament, Prabakaran Parameswaran was appointed as Chairman of the Special Task Force Committee of the Indian Community Transformation Unit (Mitra) with immediate effect". Kosmo Digital. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  5. "P. Prabakaran was appointed Chairman of MITRA". berita.rtm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  6. "Official Portal of The Parliament of Malaysia - Member's Profile". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  7. Kaur, Minderjeet (2 May 2018). "Batu's independent candidate offers to represent PKR; One of the two independent candidates contesting for the Batu federal constituency has offered himself to represent PKR, following the Election Commission's (EC) move last Saturday to disqualify incumbent and favourite Tian Chua from defending the seat". Free Malaysia Today (FMT). பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  8. D'Souza, Kathlyn (16 August 2018). "Malaysia's Youngest Parliamentarian P Prabakaran On Why Age Is Not A Barrier To Doing Great Things For Your Nation". Generation T.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:கோலாலம்பூர் மக்களவைத் தொகுதிகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரபாகரன்_பரமேசுவரன்&oldid=25107" இருந்து மீள்விக்கப்பட்டது