பிரகாஷ் பெலவாடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரகாஷ் பெலவாடி
Prakash Belawadi
Prakash Belavadi 4.jpg
2020-21 இல் பர்வா நாடகத்தில் பெலவாடி
பிறப்பு3 மார்ச்சு 1961 (1961-03-03) (அகவை 63)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்விசுவேசுவராய பொறியியல் கல்லூரிப் பல்கலைக்கழகம், பெங்களூர்
பணிநடிகர், தயாரிப்பாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மதராஸ் கஃபே
தி காஷ்மீர் பைல்ஸ்
எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு
வாழ்க்கைத்
துணை
சந்திரிகா
பிள்ளைகள்2

பிரகாஷ் பெலவாடி (Prakash Belawadi, பிறப்பு: 3 மார்ச் 1961) கன்னட நாடகக் கலைஞரும், திரைப்பட இயக்குநரும், ஊடக ஆளுமையும் ஆவார்.[1] இவர் ஓர் ஆசிரியரும், சமூக ஆர்வலரும், பத்திரிகையாளரும் ஆவார். பெங்களூரைச் சேர்ந்தவர்.[2] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல கருத்தரங்குகளிலும் , மாநாடுகளிலும், விழாக்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் பல நிகழ்வுகலும், டெட் மாநாடுகளிலும் ஊக்கமளிக்கும் பேச்சாளராக உள்ளார்.[3][4][5][6] பெலவாடி 2010 முதல் பெங்களூர் பன்னாட்டுக் குறும்பட விழாவின் நிறுவனக் குழுவின் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.[7]

தொடக்க வாழ்வு

பெலவாடி பெங்களூரில் நாடகக் கலைஞர் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[8] இவரது தந்தை 'மேக்கப் நானி' என்று பிரபலமாக அழைக்கப்பட்ட நஞ்சுண்டய்யா நாராயண் (1929-2003) கன்னடத் திரையரங்கில் ஒரு ஆளுமையாக இருந்தார். தாயார், பார்கவி நாராயண், ஒரு புகழ்பெற்ற திரைப்பட, நாடகக் கலைஞர்.[9] 1983-இல் விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார்.[10][11]

இவர் நடித்த சில திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2013 மதராஸ் கஃபே பாலா இந்தி
2014 உத்தம வில்லன் மரு. டி. எஸ். தமிழ்
2017 டேக் ஆஃப் ராஜன் மேனன் மலையாளம்
2017 அவள் யோசுவா தமிழ்[12]/இந்தி இருமொழித் திரைப்படம்
2019 தற்செயலான பிரதம மந்திரி எம். கே. நாராயணன் இந்தி
2019 சாஹோ சிண்டே தெலுங்கு/இந்தி இருமொழித் திரைப்படம்
2020 சகுந்தலா தேவி பிசாவ் மித்திரா மணி இந்தி
2020 சூரரைப் போற்று பிரகாஷ் பாபு தமிழ்
2021 தி காஷ்மீர் பைல்ஸ் டாக். மகேசுகுமார் இந்தி

விருதுகள்

  • பிரகாஷ் பெலவாடி எழுதி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டம்பிள், 2003 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.[13]
  • கலைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2003 ஆம் ஆண்டு கர்நாடக அரசு ‘பிரதிபா பூஷன்’ பட்டத்தை வழங்கியது.[14]
  • ஆங்கில, கன்னட மொழி நாடகத்திற்கான பங்களிப்பிற்காக கர்நாடக நாடக அகாடமி விருது (2011-12) பெற்றார்.[15]
  • சிட்னி, பெல்வோ நாடக நிறுவனம் தயாரித்த எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான ஆத்திரேலியாவின் ஹெல்ப்மேன் விருது (2019) வழங்கப்பட்டது.[16][17]

மேற்கோள்கள்

  1. ""I Can Quit Acting, Not Theatre" Says Actor-Director Prakash Belawadi". 2 August 2017. https://starofmysore.com/can-quit-acting-not-theatre-says-actor-director-prakash-belawadi/. 
  2. Patel, Aakar (31 August 2013). "A restless Renaissance Man". https://www.livemint.com/Leisure/PqMncNXmZWWF81V4XYOu1M/A-restless-Renaissance-Man.html. 
  3. "TEDx talks by Prakash Belwadi". https://www.simplylifeindia.com/prakash-belawadi.html. 
  4. "Interactive Movies, Prakash Belawadi, TEDxSIBMBengaluru". https://www.youtube.com/watch?v=FZMEchRFuYU. 
  5. "When Tomorrow Comes, Prakash Belawadi, TEDxBITBangalore". https://www.youtube.com/watch?v=FXYtOsygt4g. 
  6. "Identities," Are you really what you are ? ", Prakash Belawadi, TEDxNMIMSBangalore". https://www.youtube.com/watch?v=uIdLekdHzIg. 
  7. "Prakash Belawadi, A mentor at BISFF'19" இம் மூலத்தில் இருந்து 19 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191219072806/https://bisff.in/about-us.php. 
  8. "BEST OF BANGALORE - Innovation Edition". https://issuu.com/svengvp/docs/bob2_book/53. 
  9. "Family time in Kannada films". 8 November 2019. https://www.deccanherald.com/entertainment/family-time-in-kannada-films-774508.html. 
  10. "Prakash Belawadi - Ward No 142 - Loksatta Party (LSP) Candidate - BBMP Elections". 26 March 2010 இம் மூலத்தில் இருந்து 19 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191219074800/http://www.mybengaluru.com/resources/2961-Prakash-Belawadi-Ward-No-Loksatta-Party.aspx. 
  11. "Alumni of UVCE". https://uvce.ac.in/alumni.php. 
  12. "Mani Ratnam isn't a fan of horror films: Milind Rau". https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/oct/05/mani-ratnam-isnt-a-fan-of-horror-films-milind-rau-1666865.html. 
  13. "The 50th National Film Awards". https://www.outlookindia.com/website/story/the-50th-national-film-awards/220927. 
  14. "Pratibha Bhushan title is conferred on Nikhil Joshi and Prakash Belawadi (culture)". The Times of India. 19 August 2003. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Honour-for-Sachin-Saurav-and-Kumble/articleshow/136758.cms. 
  15. "Venkatswamy, Belawadi get Nataka Academy Awards". https://www.newindianexpress.com/cities/bengaluru/2012/sep/28/venkatswamy-belawadi-get-nataka-academy-awards-410366.html. 
  16. "Best Male Actor in a Play, Helpmann Awards 2019". http://www.helpmannawards.com.au/2019/nominees-and-winners/. 
  17. "Helpmann awards 2019: Belvoir sweeps stage industry accolades over two nights". 15 July 2019. https://www.theguardian.com/stage/2019/jul/16/helpmann-awards-2019-belvoir-sweeps-stage-industry-accolades-over-two-nights/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரகாஷ்_பெலவாடி&oldid=21955" இருந்து மீள்விக்கப்பட்டது