பா. தேவேந்திர பூபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பா. தேவேந்திர பூபதி
பா. தேவேந்திர பூபதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
அ.பா. தேவேந்திர பூபதி
பிறந்ததிகதி பெப்ரவரி 18, 1969 (1969-02-18) (அகவை 55)
பணி வணிக வரித்துறை கூடுதல் ஆணையாளர் தமிழ் நாடு அரசு

[1]அ.பா. தேவேந்திர பூபதி (A.B. Devendhira poopathy)புகைப்படத்திற்கு நன்றி கீற்று "பூபதி" என்று தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அழைக்கப்படும் இவர் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ல் பிறந்தவர். நவீனத் தமிழ் கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் தத்துவவியலின் பால் ஆர்வம் உடையவர். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமிக்க கவியாளுமையாக திகழ்பவர் . சங்கக் கவிதைகளைப் போல காலத்தில் நிலைத்து நிற்கும் பல சிறந்த கவிதைகளை எழுதி வருகிறார்.

மேலும் சமகால தமிழ் கலை இலக்கிய முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை கடவு அமைப்பு மற்றும் பதிப்பகத்தை உருவாக்கி அரங்கக் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் , கருத்தரங்குகள் , தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் விவாதங்கள் முன்னெடுத்து வருகிறார்.

தமிழிசைக் கச்சேரி களின் வாயிலாக பல்வேறு இசை ஆளுமைகளோடு இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

மதுரை யதார்த்தா திரைப்பட இயக்கத்தின் தலைவராக வும் மதுரை சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா வை இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறார்.

சக தமிழ் கவிஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக புத்தகத் திருவிழாக்களில் நவீன தமிழ்க் கவிதை வாசிப்பினை நடத்தி வருகிறார். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி கருணாநிதி மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கலாப்ரியா ,யூமா வாசுகி , மாலதி மைத்ரி , சுகிர்தராணி , சல்மா , யவனிகா ‌‌க்ஷூராம் , லட்சுமி மணிவண்ணன் , கரிகாலன் , குவளைக் கண்ணன் போன்ற மூத்த கவிஞர்கள் நவீன கவிதை வாசிப்பில் பங்கேற்றிருக்கின்றர்.

. இதுவரை ஏழு கவிதைத்தொகுப்புகளை எழுதியுள்ளார்.

1 . பெயர்ச்சொல்

2. வெளிச்சத்தின் வாசனை

3. அந்தர மீன்

4. ஆகவே நானும்

5. முடிவற்ற நன்பகல்

6.நடுக்கடல் மௌனம்.

7. வாரணாசி

இவரது கவிதைகள் கல்குதிரை , காலச்சுவடு , மணல் வீடு , உன்னதம் , புது எழுத்து , புதிய விசை , உயிரெழுத்து , உயிர்மை , சிலேட் , படிகம் , யாதுமாகி , காக்கைச் சிறகினிலே மற்றும் இந்தியா டுடே , ஆனந்த விகடன் , கல்கி , சண்டே இந்தியன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

பிறப்பும் கல்வியும்

தமிழகத்தில் உள்ள பழநியின் வடகோடியில் உள்ள குபேரப்பட்டினம் என்ற ஊரில் பிறந்துள்ளார்.[2] பழநியில் உள்ள சிறுமலர் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த அவர் பத்தாவது வகுப்பினை ஆயக்குடி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை அருள் மிகு பழனியாண்டவர் கலைப் பண்பாட்டுக் கல்லூரியிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பிரிவிலும் மேற்படிப்பையும் பயின்றுள்ளார். வணிக மேலாண்மை படிப்பை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

இலக்கிய ஆர்வம்

பழனியில் கிரிவலம் நடைபெறும் நாட்களில் கற்றுக் கொடுக்கப்படும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியச் சைவ சமயப் பாடல்களைக் கேட்டு தமிழ் இலக்கியங்கள் மீது ஈடுபாடு கொண்டவர், இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்ததும் கவிதைகள் எழுத தொடங்கினார். கல்லூரி படிக்கும்போது பூமணிமாறன் என்பவருடன் இணைந்து 'தென்றல்’ என்ற இலக்கிய இதழ் தொடங்கி நடத்தியுள்ளார்.[2]

கவிதை தொகுப்புகள்

இவர் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகள்[3]:

  • "பெயற்சொல்"- 2003
  • "வெளிச்சத்தின் வாசனை" - 2005
  • "அந்தரமீன்" - 2007
  • "முடிவற்ற நண்பகல்" - 2010
  • "ஆகவே நானும்" - 2012
  • "நடுக்கடல் மௌனம்" - 2014
  • வாரணாசி - 2016

தமிழ் இலக்கியம், இசை, கலாச்சாரம் இவைகளை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டு தேவேந்திர பூபதியாலகடவு அமைப்பு 2003 ல் துதுவங்கப்பட்டது.[சான்று தேவை] இந்த அமைப்பு இதுவரை பல்வேறு இலக்கிய நிகழ்வுகம்ளமற்றும் இசை / தொல்லியல் ை நடத்தியிருக்கிறது.

இந்த அமைப்பு, முதன்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நெடுங்குருதி நாவலின் விமர்சனக் கூட்டத்தோடு ஆரம்பித்து அவரின் அரவான் நாடகத்தை முதன்முறையாக அரங்கேற்றி தன் இலக்கியப் பணியைத் துவக்கியது.[4] அதன்பின் மதுரையில் மெய்ப்பொருளியல் கவிதை கருத்தரங்கம் மற்றும் தேவேந்திரபூபதியின் பெயற்சொல் கவிதை நூல் வெளியீட்டு விழாவை அரங்கேற்றியது. இதுவரை இந்த அமைப்பின் மூலமாய் சுமார் ஐம்பதிற்கும்் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

விருதுகள் மற்றும் பிற பணிகள்

பூபதி 'கடவு' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் அ. ர. பத்மநாபன் எழுதிய பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலான 'சித்ரபாரதி' எனும் நூலை காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் சுமார் 1500 பக்கங்களைக் கொண்ட தமிழ் இசைக்கான இலக்கண நூலையும் தமிழ் இசைக்கான இலக்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். கூடல் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் தமிழின் நவீன படைப்பாளிகள் சங்கமிக்கும் நிகழ்வு ஒன்றையும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்திவருகிறார்.

தமிழரசி இதழின் பொற்கிழி கவிஞர் பாரதி இலக்கிய சங்கம் விருது, கவிதைக்கான களம் புதிது விருது 2012 என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பா._தேவேந்திர_பூபதி&oldid=5023" இருந்து மீள்விக்கப்பட்டது