பாவைப் பாட்டு
Jump to navigation
Jump to search
பாவைப் பாட்டு என்னும் பழமையான நூல் ஒன்று இருந்ததை யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றின் உரைகளால் அறிய முடிகிறது. [1]
பாட்டு - மேற்கோள் [2]
- கோழியும் கூவின குக்கில் அழைத்தன
- தாழியுள் நீலத் தடங் கணீர் போதுமினோ
- ஆழி சூழ் வையத்து அறிவன் அடி ஏந்தி
- கூழை தழையக் குடைதும் குளிர் புனல்
- ஊழியுள் மன்னுவோம் என்று ஏல் ஓர் எம் பாவாய் [3]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 265.
- ↑ பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ இந்தப் பாடல் வருமிடத்தில் தரப்பட்டுள்ள உரை - "நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்று வரையறுத்துச் சொன்னார். இது ஐந்தடியான் வந்ததது ஆயினும் ஒதுபுடை எப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின் பால் படுத்து வழங்கப்படும். இதனைத் தரவுக் கொச்சகம்' எனினும் இழுக்காது. இஃது அவிநயனார் காட்டிய பாட்டு.