பாவியூர்
பாவியூர் என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக் கிராமமாகும். பாவியூர் என்ற பெயரில் உள்ள பாவி என்ற சொல்லுக்கு குறும்பா மொழியில் கிணறு என்று பொருள்.
பாவியூரானது கோத்தகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழ்கோத்தகிரியில் இருந்து, கரிக்கையூர் செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில் உள்ள கொண்டை ஊசி வளைவில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டரில் உள்ளது. இந்தக் கிராமத்தில் மொத்தம் 130 ஆதிவாசிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஐந்தாவது வரையான ஆரம்பப்பள்ளி இருக்கிறது. மேற்கொண்டு படிக்க, கீழ் கோத்தகிரிக்கோ, மேல் கோத்தகிரிக்கோ செல்லவேண்டும்.[1] இந்த ஊர் மக்கள் காய்கறித் தோட்டம் பராமரிப்பது, தேனீ வளர்ப்பு, அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குப் போவது ஆகிய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ பாலு சத்யா (18 செப்டம்பர் 2013). "குறும்பர் வாழ்வு… பேசும் ஓவியங்கள்!". கட்டுரை. குங்குமம் தோழி. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2018.
- ↑ ஆன்மன் (சூலை 6 2018). "ஆதியின் அழகான தடங்கள்". இந்து தமிழ், இளமை புதுமை இணைப்பு: 3.