பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு (நூல்)
Jump to navigation
Jump to search
நூலாசிரியர் | புலியூர் முருகேசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொருண்மை | தமிழ்ச் சிறுகதைகள் |
வகை | தொகுப்பு |
வெளியீட்டாளர் | ஆம்பிரம் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2014 |
பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்பது புலியூர் முருகேசன் எழுதிய தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு தொகுப்பு நூல் ஆகும். இந்த நூல் 2014 ஆம் ஆண்டு ஆம்பிரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் தாக்கப்படல்
இந்த நூல் கொங்கு வேளாளர் சமூகத்தினரைத் தவறாக விவரித்து உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிலர் இவரை வீட்டுக்குச் சென்று கடத்திச் சென்று, மரத்தில் கட்டி தாக்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இவரது நூல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், இவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ "எழுத்தாளர் புலியூர் முருகேசன் விவகாரம்: திராவிட, கம்யூ. இயக்கங்களுக்கு கொமதேக கண்டனம் - எழுத்தாளருக்கு ஆதரவாக கோவையில் மார்ச் 4-ல் ஆர்ப்பாட்டம்". tamil.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2015.