பாலசுப்ரமணியம் நாச்சியப்பன்
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் Yang Berbahagia Senator Balasubramaniam Nachiappan | |
---|---|
மலேசியாவின் மேலவை உறுப்பினர் | |
நியமனம்: மலேசிய மாமன்னர் | |
தலைவர் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2010 | |
Deputy | லிம் குவான் செங் (Lim Guan Seng) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Balasubramaniam a/l Nachiappan |
அரசியல் கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பெரிக்காத்தான் (2020 - தற்போது வரையில்) |
வேலை | அரசியல்வாதி |
இருப்பிடம் | T391-55, தாமான் புக்கிட் பெடா, 27000 செராண்டுட் பகாங் |
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் (ஆங்கிலம்: Balasubramaniam Nachiappan; மலாய்: Balasubramaniam a/l Nachiappan; சீனம்: 巴拉苏拉马尼亚姆) என்பவர் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றத்தின் (மலாய்: Dewan Himpunan Penyokong PAS) (DHPP) ஆங்கிலம்: Central PAS Supporters Assembly) தலைவர் ஆகும்.
மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் என்பது மலேசிய இசுலாமிய கட்சியின் தலைமைப் பிரிவுகளில் ஒன்றாகும். மலேசிய இசுலாமிய கட்சியின் இசுலாமிய மதம் சாரா உறுப்பினர்களைக் கொண்டது. அந்த மன்றத்தின் தலைவராக பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் உள்ளார். மே 23, 2010-க்கு முன்னர் அந்த மன்றம் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் கூடலகம் (PAS Supporters Club) என்று அழைக்கப்பட்டது.
பொது
இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் 14-ஆவது மேலவையின் உறுப்பினர் (Dewan Negara) ஆகும்.[1]
இவர் மலேசிய மாமன்னர் அவர்களால்; 2020 சூன் 16-ஆம் தேதி மலேசிய மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]
மலேசிய மத்திய கூட்டரசு அரசாங்கத்திலும்; மலேசிய மாநில அரசு நிர்வாகங்களிலும்; மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் பலர், பற்பல பதவிகளில் பிரதிநிதிகளாகச் சேவையாற்றி வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள்
ஆண்டு | தரவரிசை | பகுதி | தனிநபர் | வாக்குகள் | போட்டியாளர் | வாக்குகள் | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|---|---|
பகாங் சிறீ செத்தியா இடைத்தேர்தல் 2018 | மலேசிய நாடாளுமன்றம் | P89 பெந்தோங் | பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் (மலேசிய இசுலாமிய கட்சி) | 5,706 | லியோவ் தியோங் லாய் (Liow Tiong Lai) (பாரிசான் - மலேசிய சீனர் சங்கம்) |
23,684 | 2,032 |
ஓங் தெக் (Wong Tack) (பாக்காத்தான் - ஜனநாயக செயல் கட்சி) |
25,716 |
மேற்கோள்கள்
- ↑ "Official Portal of The Parliament of Malaysia - Senator's Profile". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 April 2023.
- ↑ Balasubramaniam wakil pertama DHPP dalam Dewan Negara