பாலகோபாலன் நம்பியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாலகோபாலன் நம்பியார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பாலகோபாலன் நம்பியார்
பிறந்ததிகதி மே 7, 1952
இறப்பு மே 9, 2015
அறியப்படுவது எழுத்தாளர்

பாலகோபாலன் நம்பியார் (மே 7, 1952 - மே 9, 2015)[1] மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். கப்பல் துறை நிர்வாகியாகப் பணியாற்றியுள்ள இவர் கிள்ளான் வாசகர் வட்டத்தின் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1978 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தவர். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் ஆகியவற்றை எழுதி வந்தார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • கனவுக் கோலங்கள், புதினம், 2009[2]

உசாத்துணை

  1. "எழுத்தாளர் பாலகோபாலன் நம்பியார் காலமானார்!". செல்லியல். 10 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. "பாலகோபாலன் நம்பியார் அவர்களின் புத்தகங்கள்". விருபா. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
"https://tamilar.wiki/index.php?title=பாலகோபாலன்_நம்பியார்&oldid=6327" இருந்து மீள்விக்கப்பட்டது