பாம்புக்கோவில் சந்தை (ஊர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாம்புக்கோவில் சந்தை என்றும் மடத்துப்பட்டி என்றும் வழங்கப்படுவது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஒன்றியத்தில் மேற்கு மலைத்தொடரின் புளியங்குடி அருகே அமைந்திருக்கும் ஊர்.

மக்கள் வகைப்பாடு

இங்கு இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்னும் மூன்று மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்கின்றனர். இவர்களது முக்கியமான தொழில் விவசாயம். பீடி சுற்றும் தொழிலும் நடைபெறுகிறது.

சிறப்புகள்

இவ்வூரில் நாகதேவதையை மக்கள் பழங்காலம் தொட்டே வணங்கி வருகின்றனர். இவ்வூரில் பாம்பாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை வணங்குபவர்களது துன்பங்களை அம்மன் நீக்குகின்றார் என்பது அக்கோயிலை வழிபடுவோரின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை புகழ் பெற்ற சந்தை இங்கு நடைபெறுகிறது.

இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.

புளியங்குடிகான இரயில் நிலையம் இவ்வூரில் அமைந்துள்ளது.

படத்தொகுப்பு

மேற்கோள்