பாண்டியர் கொடி
பாண்டியர் கொடி என்பது தமிழகத்தை ஆண்ட பாண்டியர்களின் கொடி ஆகும் இது ஒற்றை மீனாகவோ அல்லது இரட்டை மீன்களாகவோ இருக்கலாம்.[1][2] ஆனால் கொடியைப் பற்றிய குறிப்பும் விளக்கமும் இல்லை. எனவே, ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட எந்த பாண்டியர் கொடிகளும் உவமைக்காக உருவாக்கப்பட்டவையே. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்று உவமைகளின் படி இரட்டை மீன் அல்லது ஒற்றை மீன் கொண்ட கொடிகள் இருந்துள்ளன.[3][4]
12 ஆம்-நூற்றாண்ல் வாழ்ந்த தமிழ் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் பாடல் வரிகள் சோழர் கொடியுடன் ஒப்பிட்டு பாண்டியரின் மீன்கொடியை குறிப்பிடுகிறது.[5][6]
“ | வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
- ஒட்டக்கூத்தர் |
” |
இந்த வரிகளுக்குப் பொருள் "மீன் கொடி (பாண்டியர் கொடி) புலிக் கொடிக்கு (சோழர் கொடி) சமமானதா?"
மேலும் சிலப்பதிகாரத்தின் காட்சிக் காதையில் வரும் வரிகள், பாண்டியனின் கொடி கயல் கொடி என்பதைச் சுட்டுகிறது.
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
'நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன; 155
புராணம்
ஒரு புராணக் கதையின்படி இந்துப் பெண் கடவுளான மீனாட்சி ( மீன்களைப் போன்ற கண்கள் கொண்டவள்) பாண்டிய மன்னனின் மகளாக பிறந்தார். பாண்டியர் சின்னமான மீன் அவர்களின் நாணயம் உள்ளிட்டவற்றில் அவர்களின் மரபைக் காட்டும்விதமாக இடம்பெற்றது. மீனாட்சி (மீன்+ஆக்ஷி ) என்ற சொல் இரண்டு சொற்களின் சேர்க்கை அதாவது தமிழ்ச் சொல்லான மீன் மற்றும் சமசுகிருத சொல்லான ஆக்ஷி (கண்).[7]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Masterpieces in metal". Institute For Oriental Study, Thane. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
- ↑ Nelson, J.H. Political History of the Madura Country. Asian Educational Services.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - ↑ Walter Codrington, Hubert. Ceylon Coins and Currency. Asian Educational Services.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - ↑ History & Civics For Vi (Tn). Tata McGraw-Hill Education.
{{cite book}}
: More than one of|authorlink=
and|author-link=
specified (help) - ↑ "ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும்". Tamil Wikisource. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
- ↑ "எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்". Tamil Virtual Academy. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
- ↑ "Sri Meenakchi (Parvathi)". Hindu Society of Minnesota. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)