பழைய வண்ணாரப்பேட்டை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பழைய வண்ணாரப்பேட்டை
இயக்கம்மோகன் ஜி
கதைமோகன் ஜி
இசைஜுபின்
நடிப்புபிரஜின்
அஷ்மிதா
ஒளிப்பதிவுபரூக். ஜே
படத்தொகுப்புதேவராஜ்
கலையகம்சிறீ கிருஷ்ணா டாக்கீஸ்
விநியோகம்அனாமிகா பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 2, 2016 (2016-12-02)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பழைய வண்ணாரப்பேட்டை ( Pazhaya Vannarapettai) என்பது மோகன் ஜி எழுதி இயக்கி 2016ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அரசியல் நாடகத் திரைப்படமாகும்.[1] படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார்.[2] படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

  • கார்த்திக் வேடத்தில் பிரஜின்
  • அஷ்மிதா
  • துணைக் காவல் ஆணையாளர் மூர்த்தியாக ரிச்சர்ட் ரிசி
  • தீனாவாக நிஷாந்த்
  • கருணாஸ்
  • ரோபோ சங்கர்
  • 'சலீம்' அஷ்மிதா
  • சில்க்காக காஜல் பசுபதி
  • தாசு கௌசிக்

தயாரிப்பு

ஒரு பரபரப்பூடும் அரசியல் திரைப்படமான இதில், பிரஜின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அஸ்மிதா பிரஜினுடன் காதல் வயப்படுகிறார், மேலும் ரிச்சர்ட் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில் கருணாஸ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் ஒலிச்சுவடு வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியதாகத் தெரிவித்தார்.[3]

ஒலிப்பதிவு

படத்துக்கு ஜூபின் இசையமைத்திருந்தார்.

வெளியீடு

படம் 2 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டது. 14 சனவரி 2017 அன்று பொங்கல் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உரிமை விற்கப்பட்டது.

வரவேற்பு

இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.[4] சிஃபி 5க்கு 3 நட்சத்திரங்களைக் கொடுத்தது.[5]

தி டெக்கன் குரோனிக்களின் அனுபமா சுப்ரமணியம், "ஒளிப்பதிவாளர் பரூக் தனது ஒளியமைப்புடன் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார். மேலும், திரைப்படத்தின் சூழலை உயிர்ப்பிக்கிறார். இசை செயல்பாட்டுக்குரியது. ஒரு அறிமுக வீரரின் நேர்மையான முயற்சி- கண்டிப்பாக பார்க்க வேண்டியது!" என்று எழுதினார்.[6]

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த எம் சுகந்த், வட சென்னையின் 'இரவு நேர காட்சிகளை' மிகவும் யதார்த்தமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் பரூக்கின் நல்ல ஆதரவுடன் திரைப்படத் தயாரிப்பில் இயக்குனர் நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறி படத்தை 3/5 நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டார். படம் உண்மையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது.[7]

சான்றுகள்

  1. "Pazhaya Vannarapettai Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers — Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 2016-11-25.
  2. Hungama Tamil (2016-11-16), Pazhaya Vannarapettai | Official Tamil Trailer | Prajin | Nishanth | Richard | Asmitha | Tamil Movie, பார்க்கப்பட்ட நாள் 2016-11-25
  3. "A movie that revolves around north Chennai". Archived from the original on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
  4. "A film on Chennai's 2013 fake marriage cartel - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.
  5. "Pazhaya Vannarapettai review-Amateurish performances spoil the show". Sify (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
  6. "Pazhaya Vannarapettai movie review: Anhonest attempt for a debutante". deccanchronicle. 2016-12-03. http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/031216/pazhaya-vannarapettai-movie-review-anhonest-attempt-for-a-debutante.html. 
  7. Suganth, M (2 December 2016). "Pazhaya Vannarapettai Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Pazhaya-Vannarapettai/movie-review/55744097.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பழைய_வண்ணாரப்பேட்டை&oldid=35327" இருந்து மீள்விக்கப்பட்டது