பள்ளப்பட்டி
பள்ளப்பட்டி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 19,089 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பள்ளப்பட்டி (ஆங்கிலம்:Pallapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8013 ஆண்கள், 11026 பெண்கள் ஆவார்கள். பள்ளப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 88% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 81.5% விட கூடியதே. பள்ளப்பட்டி மக்கள் தொகையில் 16.5% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[3]
இது கரூர் மக்களவைத் தொகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அடங்குகிறது. கரூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் குளித்தலை அருகே இக் கிராமம் உள்ளது. இங்கு பெருவாரியாக முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். ஆண்களில் பலர் தொழில் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களை அராபியர்களின் வழிவந்தவர்கள் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிக்கவும்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban பரணிடப்பட்டது 2015-06-08 at the வந்தவழி இயந்திரம் - Karur District;Aravakurichi Taluk;Pallapatti (TP) Town
வெளியிணைப்புக்கள்
- பள்ளப்பட்டியில் ஒரு கதை பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்