பல்காயம்
Jump to navigation
Jump to search
பல்காயனார் இயற்றிய நூல் பல்காயம். இது மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இந்த நூலின் யாப்பியல் நூற்பக்கள் சில யாப்பருங்கல-விருத்தி உரையில் காணப்படுகின்றன. மயிலை சீனி வேங்கடசாமி என்னும் அறிஞர் இவற்றைத் தொகுத்து முதன்முதலில் வெளியிட்டார். அதில் 37 நூற்பாக்கள் உள்ளன. முனைவர் ச.வே.சுப்பிரமணியன் பன்னிரு பாட்டியல் என்னும் நூல்-உரையில் வரும் பல்காயனார் நூற்பாக்கள் நான்கினையும் இதனோடு இணைத்துள்ளார்.
இந்த நூலை மதிப்பிடும் வெண்பாப்பாடல் ஒன்று யாப்பருங்கல-விருத்தி நூலில் காணப்படுகிறது. (இந்தப் பாடல் பொருள் உணரும் பாங்கில் பிரிக்கப்பட்டு இங்குத் தரப்படுகிறது.
- தொல்காப்பியப் புலவர் தோன்ற விரித்துரைத்தார்
- பல்காயனார் பகுத்துப் பன்னினார் – நல்யாப்புக்
- கற்றார் மதிக்கும் கலைக் காக்கை-பாடினியார்
- சொற்றார் தம் நூலுள் தொகுத்து. – எழுத்தோத்து முதல்-நூற்பா உரை
தொல்காப்பியம் கூறும் யாப்பியல் செய்திகளைப் பல்காப்பியனார் பகுத்துச் சொன்னார் என்றும், காக்கை-பாடினியார் தொகுத்துச் சொன்னார் என்றும் இந்தப் பாடல் மதிப்பிடுகிறது.
பல்காயனார் தரும் செய்திகள்
- செந்தமிழ்-மாலை \ 27 பாடல் கொண்ட நூல்
- தாரகை-மாலை \ இருபொருள் தரும் 27 பாடல் கொண்ட நூல்.
- தாண்டகம் \ ஆடவர் கடவுளைப் பாடுவது
- * குறுந்தாண்டகம் \ அளவு ஒத்த அறுசீர்-அடிகள் 4 கொண்ட விருத்தப்பாடல்
- * நெடுந்தாண்டகம் \ அளவு ஒத்த எண்சீர்-அடிகள் 4 கொண்ட விருத்தப்பாடல்
- இறுதிச்சீர் ஒன்றி வருவது இயைபு
- தொடைகள் 9 \ மோனை, எதுகை, முரண், அளபெடை, செந்தொடை, இயைபு, பொழிப்பு, ஒரூஉ, இரட்டை (26)
- கூன் \ விருத்தத்தின் ஒவ்வொரு அடியிலும் உள்ள பொருளைக்கொண்டு முடியும் தனிச்சொல் (4)
கருவிநூல்
- மயிலை சீனி வேங்கடசாமி, மறைந்துபோன தமிழ்நூல்கள், 2001
- தமிழ் இலக்கண நூல்கள், ச.வே. சுப்பிரமணியன் தொகுப்பு, 2007
- யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960