பராபரை மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பராபரை மாலை [1] என்பது வீரை அம்பிகாபதி இயற்றிய தோத்திர நூல். 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதில் காப்புச் செய்யுள் ஒன்றும் "பரமாயப் பராபரையே" என முடியும் 53 விருத்தங்களும் உள்ளன. இந்த 53 பாடல்களும் வருக்கக் கோவை, வருக்கமாலை நூல்களில் [2] பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படுவது போல அ, ஆ, இ, ஈ ... எழுத்துக்களை முதலெழுத்தாக அமைத்துக்கொண்ட பாடல்களாக அடுக்கப்பட்டுள்ளன. [3]

பாடல்கள் - எடுத்துக்காட்டு [4]

1

அள்ளல் கமலம் கருஞ்சேறு நாறும் என்று அன்பர் தங்கள்
உள்ளக் கமலத்து உறைகின நீ உம்பர் உள்ளம் உறும்
கள்ளத்து இருக்கை கரைக்க என்றோ கம்பை ஆற்றங்கரைப்
பள்ளத்து இருந் தவம்மே! பரமாய பாராபரையே

2

சுரக்கும் பசு என்றும் சிந்தாமணி என்றும் சொல்லிச் செல்வம்
கரக்கும் பெருஞ் செல்வரு பால் நடந்தே கவி கண்டு நிதம்
இரக்கும் தொழிலில் தடுமாறி நெஞ்சம் இரவு பகல்
பரக்கும் பரப்பு ஒழிப்பாய், பரமாய பாராபரையே

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 260. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. ஒப்புநோக்குக - ஆத்திசூடி, கொன்றைவேந்தன்
  3. எல்லா மொழிமுதல் எழுத்துக்களுக்கும் பாடல்கள் இல்லை. நெரிந்தெடுத்துக்கொண்ட சில முதலெழுத்துக்களை வைத்தே பாடல்கள் பாடப்பட்டுள்ளன
  4. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை
"https://tamilar.wiki/index.php?title=பராபரை_மாலை&oldid=17445" இருந்து மீள்விக்கப்பட்டது