பரத் ரெட்டி (துடுப்பாட்டக்காரர்)

பரத் ரெட்டி (Bharath Reddy, பிறப்பு: நவம்பர் 12 1954), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1978 – 1981 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

பரத் ரெட்டி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 4 3
ஓட்டங்கள் 38 11
மட்டையாட்ட சராசரி 9.50 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 21 8*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/2 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

தனிப்பட்ட வாழ்க்கை

தென்னிந்திய படங்களில் நடிகையான இவரது மகள் சிரேயா ரெட்டி, திரைப்பட தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவை 2008 இல் திருமணம் செய்து கொண்டார். சிரேயா ரெட்டி ஸ்ரீயா ரெட்டி, திரைப்பட தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவை 2008 இல் திருமணம் செய்து கொண்டார்.

துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரெட்டி கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில் பணியாற்றினார். சென்னையில் துடுப்பாட்டப் பயிற்சி முகாம்களை நடத்த உதவினார். அங்கு இவர் இந்திய தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோருக்கு பயிற்சி அளித்தார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்