பரட்டென்பு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பரட்டென்பு
Talus bone
படிமம்:Blausen 0411 FootAnatomy.png
வலது பாதத்தின் உடற்கூறியல்
படிமம்:Subtalar Joint.PNG
பக்கவாட்டு மற்றும் முன்பக்கத்திற்கு இடையே ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Os talus, Astragalus
படிமம்:Talus bone - animation01.gif
Talus bone -பரட்டென்பு

பரட்டென்பு (talus, astragalus அல்லது ankle bone) கணுக்காலில் உள்ள சிறிய எலும்புகளில் ஒன்றாகும்.[1] உடலின் எடை கால்கள் வழியே இந்த எலும்பின் மூலம் பாதத்திற்கு எடுத்துச் செல்லப்பபடுகிறது. இப்பரட்டென்பிற்கு தலை, கழுத்து, உடல் என முப்பகுதிகள் உண்டு. தலைப்பகுதி உள்ளும் கீழும் இருப்பதால் எப்பக்கத்தை சார்நதது என அறிய உதவுகிறது. இந்த எலும்பில் எந்தவித தசையும் இணைக்கப்படாதது, இதன் தனி தன்மையாகும்.[2]

பரட்டென்பு தலையின் முன்பகுதி நேவிகுலர் எலும்புடனும், பாதப்பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டு குதிகால் எலும்புடனும் மூட்டு உண்டாக்கும். கழுத்தில் பல்வேறு இணையங்களும் மூட்டு உறைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் உடல் 6 பகுதிகளைக் கொண்டது. மேற்பகுதி நளக எலும்புடனும், வெளிப்பகுதி சரவென்பின் கீழ்வெளி முளியுடனும், உட்பகுதி நளக எலும்பின் கீழ் உட்முளியுடன் பின்பகுதியில் பின், பரட்டென்பு மற்றும் சரவென்பு இணைக்கும் இணையங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள பாதப்பகுதி குதிகால் எலும்புடனும், முற்பகுதி கழுத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • Platzer, Werner (2004). Color Atlas of Human Anatomy, Vol. 1: Locomotor System (5th ed.). Thieme. ISBN 3-13-533305-1.
  • Thieme Atlas of Anatomy: General Anatomy and Musculoskeletal System. Thieme. 2006. ISBN 1-58890-419-9.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பரட்டென்பு&oldid=426309" இலிருந்து மீள்விக்கப்பட்டது