பத்மினி ராஜமாணிக்கம்
Jump to navigation
Jump to search
பத்மினி ராஜமாணிக்கம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பத்மினி ராஜமாணிக்கம் |
---|---|
பிறந்ததிகதி | பிப்ரவரி 14, 1956 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பத்மினி ராஜமாணிக்கம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு பத்திரிகையாளருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு
- ஆரம்பம் நீதான் (2013)
தொகுப்புப் பணி
- இறையாய் இரு கனா - அக்கினி சுகுமார் கவிதைகள் (2022)
பரிசில்களும், விருதுகளும்
- பத்திரிகையாளர்களுக்குச் சுற்றுச் சூழல் அமைச்சு நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
- தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு
- தமிழ் நேசன் சிறுகதைப் போட்டியில் பரிசு
- நவீன இலக்கியச் சிந்தனை புதுக்கவிதைப் போட்டியில் பரிசு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வுப் பரிசு
- செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு (2002).