பதிபசுபாச விளக்கம் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பதி பசு பாசம் என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. இதனை விளக்கிக் காட்டும் வகையில் சிவஞான வள்ளல் ஒரு நூல் செய்துள்ளார். இது அவர் யாத்துள்ள 20 நூல்களில் ஒன்று.

  • இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

இதில் 257 விருத்தப்பாடல்கள் உள்ளன. நூலாசிரியர் தன் ஆசிரியர் சுயம்பிரகாசருக்கும், திருமூலர், வியாசர் போன்றோருக்கும் வணக்கம் கூறிவிட்டு நூல் செய்கிறார். இதில் வரும் தேவிகாலோத்திரம் என்னும் பகுதியில் காலத்தின் பாகுபாடுகள் அக்காலக் கண்ணோட்டத்தில் கூறப்படுகின்றன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005