பதம் (தமிழ் இலக்கணம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சொல்லைப் பதம்பிரித்து பார்க்கும் அறிவியல் கண்ணோட்டத்தை நன்னூல் இலக்கணம் புதுமையாகப் புகுத்தியுள்ளது. இது சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளை, roots of words பகுத்துப் பார்க்கிறது. [1] மேலும் பகுத்தால் பயனில்லாதல் போகும் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களைப் பகாப்பதம் என்றும்,[2] பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்றெல்லாம் பிரிக்கக்கூடியதாக அமைந்துள்ள சொற்களை, பகுபதம் என்றும் நன்னூல் குறிப்பிடுகிறது.

தொல்காப்பியம் முன்னோடி

  • தொல்காப்பியம் இதற்கு முன்னோடியாக ஆங்காங்கே கால்கோள் செய்துள்ளது. தொல்காப்பியம் காட்டும் உரிச்சொற்களை நன்னூல் பண்பின் பகாப்பதங்களாகக் கொண்டுள்ளது. [3]
  • பால் உணர்த்தும் ஈறுகளைத் தொல்காப்பியம் வரையறை செய்து காட்டுகிறது. இவற்றை நன்னூல் விகுதி என்று குறிப்பிடுகிறது.
  • வினைச்சொல் காலம் காட்டும் எனக் கூறும் தொல்காப்பியம், காலம் காட்டும் இடைச்சொல்லைக் காலம் கொள்ளும் மெய்ந்நிலை என்று குறிப்பிடுகிறது. நன்னூல் இதனைக் காலம் காட்டும் இடைநிலைகள் என்று விளக்குகிறது இலக்கண நூல்கள்.

அடிக்குறிப்பு

  1. நன்னூல் பதவியல்
  2. நன்னூல் 131
  3. நன்னூல் 135
"https://tamilar.wiki/index.php?title=பதம்_(தமிழ்_இலக்கணம்)&oldid=20194" இருந்து மீள்விக்கப்பட்டது