பண்புப்பெயர் புணர்ச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒரு பொருளின் வண்ணம்,வடிவம்,குணம்,அளவு,சுவை குறித்த பண்பு பெயர்கள் பிற சொற்களுடன் இணைவதை பண்புப்பெயர் புணர்ச்சி எனப்படும்.

பண்புப் பெயர்களாவன.

வண்ணம் குறித்த பெயர்கள்

கருப்பு,சிவப்பு,மஞ்சள்,நீலம்

வடிவம் குறித்த பெயர்கள்

சதுரம்,வட்டம்,செவ்வகம்

குணம் குறித்த பெயர்கள்

நல்லன்,தீயன்,வஞ்சகன்,அன்பு,அழகு

அளவு குறித்த பெயர்கள்

இரண்டு,முழம்,சாண்

சுவை குறித்த பெயர்கள்

இனிப்பு,புளிப்பு,கார்ப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கசப்பு

நன்னூல் விதி (136)

ஈறு போதல் இடை உகர இய்யாதல்

ஆதி நீடல் அடி அகர ஐ ஆதல்

தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்

இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே

விளக்கம்

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பொன்மை, பசுமை, பெருமை, அணிமை, நன்மை, தண்மை, பழமை, வன்மை, கீழ்மை, நொய்மை, இன்மை, பருமை இவை போன்ற சொற்களில் உள்ள ஈற்றெழுத்து கெடுதலும்,சிறு,பெரு போன்ற சொற்களில் இடையில் அமைந்த இடை உகரம் ஆனது இ என மாறுவதும்,நிலைமொழியில் முதலெழுத்துக் குறில் நெடிலாவதும்,முதலெழுத்தில் அமைந்த அ என்ற எழுத்து ஐ என மாறுவதும், தன் ஒற்றெழுத்தே தோன்றுவதும்,வருமொழிக்கு முன் நின்ற மெல்லினமே வேறு ஒரு மெல்லினமாக மாறுவதும்,வல்லினத்துக்கு இனமான ங்,ஞ்,ந்,ண்,ம்,ன் ஆகிய எழுத்துக்கள் தோன்றுவதும்,சில வகை யில் ஓர் எழுத்து கெடுதலும் பண்பு பெயர்ப் புணர்ச்சிக்கு இயல்பாகும்.

எடுத்துக்காட்டுகள்

சிறுமை+பொதி = சிறுபொதி

கூர்மை+வாய் = கூர்வாய்

அருமை + வினை = அருவினை

நன்மை + மணி = நன்மணி

சிறுமை+அர் = சிறியர்

பெருமை+அர் = பெரியர்

பெருமை+ஊர்=பேரூர்

முதுமை+ஊர் = மூதூர்

பசுமை+கிளி = பைங்கிளி

வெறுமை+இலை=வெற்றிலை

செம்மை+கடல் = செங்கடல்

கருமை+குயில்=கருங்குயில்

பசுமை+ஊன்=பச்சூன்

செம்மை+அடி=சேவடி,சேயடி

வெறுமை+சினம்=வெஞ்சினம்

செம்மை+ஞாயிறு=செஞ்ஞாயிறு

தொடர்புடைய நன்னூல் விதிகள்

விதி எண் 14,135,162,231,237

கருவி நூல்[தொகு]

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ. தாமோதரன் அவர்களின் பதிப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

"https://tamilar.wiki/index.php?title=பண்புப்பெயர்_புணர்ச்சி&oldid=20627" இருந்து மீள்விக்கப்பட்டது