பஞ்சாக்கர மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பஞ்சாக்கரம் என்னும் திருவைந்தெழுத்து

பஞ்சாக்கர மாலை [1] என்பது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் என்பவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது 60 வெண்பாக்களால் ஆன ஒரு சிறு நூல். [2]

இந்த நூல் தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், சீவன்-முத்தர் பூசைக்-கிரமம் - என்று மூன்று பகுப்புகளைக் கொண்டுள்ளது.

பாடல் - எடுத்துக்காட்டு [3]

நல்ல நடை

கல்லேன் பிற நூல்கள் காழியர்-கோன் பாடல் அல்லால்
சொல்லேன் சுரரைத் தொழ நினையேன் - நல்ல சிறு
செஞ் சதங்கை கொஞ்சு தண்டைச் சிற்றடிகள் பாக எழுத்
தஞ் சதங்கை ஆம் அலகம் ஆம். [4]

கண்ணுடைய வள்ளலைத் துதிக்கும் பாடல்

காழி-நகர் வாழி கவுணியர்-கோன் தாள் வாழி
வாழி அருள் கண்ணுடைய வள்ளல் தான் - ஏழிசையின்
தெய்வத் தமிழ்ப் பாடல் வாழி திருநெறியாம்
சைவத்தவர் வாழி தான். [5]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 144. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. 1932-ல் இந்த நூல் உரையுடன் 'சித்தாந்தம்' என்னும் இதழில் 47 முதல் 64 வரை உள்ள பக்கங்களில் சோமசுந்தர தேசிகர் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. விநாயகர் வணக்கப் பாடல்
  5. உரை முடிவில் உள்ள பாடல்
"https://tamilar.wiki/index.php?title=பஞ்சாக்கர_மாலை&oldid=17410" இருந்து மீள்விக்கப்பட்டது